BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

பணிநீக்கம் செய்யப்பட்ட கணினி ஆசிரியர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும்.

பணிநீக்கம் செய்யப்பட்ட கணினி ஆசிரியர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் – தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி கணினி ஆசிரியர் சங்கம் மாநிலகூட்டத்தில் தீர்மானம்.

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு நிகழ்வு திருச்சியில் உள்ள சையத் முதர்ஷா பள்ளியில் மாநில தலைவர் செல்வகுமார் தலைமையில் நடைபெற்றது.


இந்த கூட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் 2013 ஆம் ஆண்டு பணிநீக்கம் செய்யப்பட்ட 652கணினி பயிற்றுனர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும், மேல்நிலை கல்வி பயிலும் மாணவர்கள் இடைநிற்றல் இல்லாமல் கல்வி பயில கணினி அறிவியல் பாடம் கற்கும் மாணவர்களுக்கான கணினி கட்டணம் ரூபாய் 200 ரத்து செய்ய வேண்டும், மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்விற்கான பெயர் பட்டியலில் கணினி அறிவியல் பாட ஆசிரியர்களும் சேர்க்கவேண்டும், மாநகராட்சி கள்ளர் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் பணிபுரியும் கணினி பயிற்றுனர்களுக்கு நிலை 1பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )