தலைப்பு செய்திகள்
பென்னாகரம் அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு நுண் குரல்வளை குரல் நாண் கட்டி அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் குரல் மாற்றம் ஏற்பட்டு பேசமுடியாமல் இருந்த பெண்ணுக்கு மருத்துவ குழுவினர் நுண் குரல்வளை, குரல் நாண் கட்டி வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர்.
பென்னாகரம் அடுத்த காட்டாம்பட்டியை சேர்ந்தவர் முனியம்மாள் வயது 50, இவருக்கு கடந்த சில வருடங்களாக குரல் மாற்றம் ஏற்பட்டதால் பேசும் திறன் பாதிக்கப்பட்டு பேச முடியாமல் இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த அப்பெண்ணிற்கு காது-மூக்கு-தொண்டை மருத்துவர் பெ சி கணேஷ் பரிசோதனை மேற்கொண்டார். அதில் அவருக்கு வலதுபுற குரல் நாணில் கட்டி இருப்பது தெரியவந்தது. இதனை அகற்ற அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்து உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு அவருக்கு காது மூக்கு தொண்டை மருத்துவர் பெ சி கணேஷ் அவர்கள் தலைமையில் காது மூக்கு தொண்டை மருத்துவர்கள் மருத்துவர்கள் நித்தியா, பாலாஜி, மயக்கவியல் மருத்துவர்கள் அரவிந்த் பெருமாள், முனிராசு, மற்றும் மருத்துவர் வசந்த் ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினர் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம் இலவசமாக நுண்குரல்வளை குரல் நாண் கட்டி வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.
பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் இத்தகைய அறுவை சிகிச்சை முதல்முறையாக வெற்றிகரமாக செய்து முடித்த மருத்துவ குழுவினரை மருத்துவ இணை இயக்குனர் நலப்பணிகள் ஆர் மலர்விழி வள்ளல், துணை இயக்குனர் காசநோய் மருத்துவம் ராஜ்குமார், தலைமை மருத்துவ அலுவலர் கனிமொழி, அரூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ராஜேஷ் கண்ணன், மருத்துவர் அருண் பிரசாத் ஆகியோர் வெகுவாக பாராட்டினர்.
இத்தகைய அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ள தனியார் மருத்துவமனைகளை மட்டுமே பொதுமக்கள் நாடி வரும் நிலையில்
பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் இலவசமாக மேற்கொள்ளப்படும் இத்தகைய சிகிச்சைகளை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மருத்துவக் குழுவினர் கேட்டுக் கொண்டனர். மேலும் நுண் குரல்வளை குரல் நாண் கட்டி அறுவை சிகிச்சை மேற்கொண்ட நோயாளி மற்றும் அவர்களின் உறவினர்கள் மருத்துவ குழுவினர் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.