தலைப்பு செய்திகள்
ஆசிரியர்கள் இல்லாமல் பள்ளிகள் இயங்கினால் கல்வி அலுவலரே பொறுப்பு.
பணிமாறுதல் பெற்று ஆசிரியர்கள் வேறு பள்ளிக்குச் செல்வதால் பழைய பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டால் அந்தந்த வட்டார கல்வி அலுவலரே பொறுப்பு ஏற்க வேண்டும் எனத் தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை தொடக்கக்கல்வி இயக்குநர் அறிவொளி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், “பொதுமாறுதல் பெற்ற அனைத்து ஆசிரியர்களையும் இன்று மாலையில் விடுவித்து நாளை காலையில் புதிய பள்ளிகளில் பணியேற்க ஏதுவாக ஆணை வழங்கக் கேட்டுக்கொள்ளப்பட்டது. இதில் முக்கியமாக எந்தப் பள்ளியும் ஆசிரியரே இல்லை என்ற நிலை எழாதவாறு செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது. உதாரணமாக இரண்டு ஆசிரியர் பள்ளி ஒன்று உள்ளது, அதில் உள்ள இரு ஆசிரியர்களுமே மாறுதல் பெற்றுள்ளனர். அவ்வாறு அவர்களை விடுவிக்கும்போது மார்ச் 1ஆம் தேதி அப்பள்ளியில் ஆசிரியர் இல்லாத நிலை ஏற்படும்.
எனவே மாற்று ஏற்பாடாக 1ஆம் தேதி மட்டும் அப்படிப்பட்ட பள்ளிகளுக்குக் குறைந்தபட்சம் ஒரு ஆசிரியரை நியமித்து பள்ளியை நிர்வகிக்கச் சொல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் பணி மாறுதல் பெற்ற ஆசிரியர்களின் பணி விடுவிப்பு ஆணையில் நிபந்தனையுடன்கூடிய பணி விடுவிப்பு ஆணையிடப்பட வேண்டும். பணி விடுவிப்பு பெற்று புதிய பள்ளியில் சேர்ந்த அன்றே மாற்றுப் பணியில் மீண்டும் பழைய பள்ளியிலேயே மறு உத்தரவு வரும்வரை பணியாற்ற வேண்டும் எனவும் உத்தரவு வழங்கப்பட உள்ளது.
ஏற்கனவே மாறுதலில் பதிலி ஆசிரியர் நியமிக்கப்படவில்லை எனில், பள்ளிகளிலிருந்து இப்படிப்பட்ட விடுவிக்கப்பட்ட ஆசிரியர்கள் அன்று மாலையே மாற்றுப்பணியில் பழைய பள்ளியில் பணியமர்த்த வேண்டும். எந்தத் தொடக்கப் பள்ளியிலும் குறைந்தபட்சம் ஒரு ஆசிரியர் இருப்பதை அனைத்து அலுவலர்களும் உறுதிசெய்தல் வேண்டும். சென்னை: தொடக்கக்கல்வி இயக்குநர் அறிவொளி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், “பொதுமாறுதல் பெற்ற அனைத்து ஆசிரியர்களையும் இன்று மாலையில் விடுவித்து நாளை காலையில் புதிய பள்ளிகளில் பணியேற்க ஏதுவாக ஆணை வழங்கக் கேட்டுக்கொள்ளப்பட்டது.
இதில் முக்கியமாக எந்தப் பள்ளியும் ஆசிரியரே இல்லை என்ற நிலை எழாதவாறு செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது. உதாரணமாக இரண்டு ஆசிரியர் பள்ளி ஒன்று உள்ளது, அதில் உள்ள இரு ஆசிரியர்களுமே மாறுதல் பெற்றுள்ளனர். அவ்வாறு அவர்களை விடுவிக்கும்போது மார்ச் 1ஆம் தேதி அப்பள்ளியில் ஆசிரியர் இல்லாத நிலை ஏற்படும்.
எனவே மாற்று ஏற்பாடாக 1ஆம் தேதி மட்டும் அப்படிப்பட்ட பள்ளிகளுக்குக் குறைந்தபட்சம் ஒரு ஆசிரியரை நியமித்து பள்ளியை நிர்வகிக்கச் சொல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும் பணி மாறுதல் பெற்ற ஆசிரியர்களின் பணி விடுவிப்பு ஆணையில் நிபந்தனையுடன்கூடிய பணி விடுவிப்பு ஆணையிடப்பட வேண்டும். பணி விடுவிப்பு பெற்று புதிய பள்ளியில் சேர்ந்த அன்றே மாற்றுப் பணியில் மீண்டும் பழைய பள்ளியிலேயே மறு உத்தரவு வரும்வரை பணியாற்ற வேண்டும் எனவும் உத்தரவு வழங்கப்பட உள்ளது.
ஏற்கனவே மாறுதலில் பதிலி ஆசிரியர் நியமிக்கப்படவில்லை எனில், பள்ளிகளிலிருந்து இப்படிப்பட்ட விடுவிக்கப்பட்ட ஆசிரியர்கள் அன்று மாலையே மாற்றுப்பணியில் பழைய பள்ளியில் பணியமர்த்த வேண்டும். எந்தத் தொடக்கப் பள்ளியிலும் குறைந்தபட்சம் ஒரு ஆசிரியர் இருப்பதை அனைத்து அலுவலர்களும் உறுதிசெய்தல் வேண்டும்.
குறிப்பாக மார்ச் 1ஆம் தேதி பள்ளிகளுக்கு வேண்டிய மாற்று ஏற்பாடுகளை அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்களுடன் கலந்தாலோசித்து இன்றே மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு உத்தரவு வழங்கப்பட வேண்டும். மிக முக்கியமாக ஆசிரியர்கள் இல்லாமல் இயங்கும் பள்ளிகள் என அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர், வட்டாரக் கல்வி அலுவலரே முழுப் பொறுப்பேற்கக் கண்டிப்பாகப் பொறுப்பேற்க வேண்டும்” எனக் கண்டிப்பாகத் தெரிவித்துள்ளார்.