BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்து லெப்டினன்ட் ஜெனரல் ஏ.அருண் மக்களுக்கு நலத்திட்ட உதவி.

ஹெலிகாப்டர் விபத்து நடந்த குன்னூர் நஞ்சப்பசத்திரம் பகுதியில் தென்பிராந்திய லெப்டினன்ட் ஜெனரல் ஏ.அருண் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக நிழற்குடை திறந்து வைத்து, அப்பகுதி மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகேயுள்ள நஞ்சப்பசத்திரம் பகுதியில் கடந்த டிசம்பர் 8 ஆம் தேதி இராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளனது. இதனை அறிந்த அப்பகுதி மக்களும், இளைஞர்களும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்ததையடுத்து தங்களும் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் இந்த விபத்தில் பிபின் ராவத் உட்பட 14 இராணுவ வீரர்களும் வீரமரணமடைந்தனர்.

மேலும் மீட்பு பணியில் ஈடுபட்ட அப்பகுதி மக்களுக்கு இராணுவ மையத்தின் சார்பாக பல்வேறு உதவிகளையும், அடிப்படை வசதிகளையும் செய்து வருகின்றனர். குறிப்பாக அப்பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் இரண்டு முறை நஞ்சப்பசத்திரம் பகுதியில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டதில் 250 மேற்பட்ட நோயாளிகள் பயனடைந்தனர். இதனை தொடர்ந்து அப்பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் அங்கு நிழற்குடை அமைக்கப்பட்டது.

இதனை இன்று தென்பிராந்திய இராணுவ லெப்டினன்ட் ஜெனரல் ஏ.அருண், அப்பகுதியை சார்ந்த நபரை அழைத்து ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

தொடர்ந்து பெயர்பலகையையும் திறந்து வைத்தார். பின் அப்பகுதி மக்களுக்கு குளிர்கால ஆடைகள், பரிசு பொருட்கள் உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் அந்த கிராமத்திற்கான அடிப்படை வசதிகள் குறித்து சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளாவிடம் ஆலோசனை மேற்கொண்டதில், தங்களால் இயன்ற வசதிகளை அப்பகுதி மக்களுக்கு ஏற்படுத்தி தருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்தார்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )