BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

“வெற்று விளம்பரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல்.” – ஸ்டாலின் அரசை சாடும் தினகரன்.

உக்ரைனில் இந்திய மாணவர்கள் தாக்கப்படுவதாக வரும் செய்திகள் பெரும் கவலையளிக்கின்றன என்று தினகரன் கூறியுள்ளார்.

உக்ரைனில் நாளுக்கு நாள் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், அங்கு இந்திய மாணவர்கள் பலர் சிக்கித் தவித்து வருகின்றனர். மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்காக உக்ரைன் சென்றுள்ள மாணவர்கள் , திடீர் போர் நடவடிக்கையினால் எப்படி தாயகம் திரும்ப வேண்டும் என தெரியாமல் தவித்து வருகின்றனர்.

அதே சமயம் இந்தியாவுக்கு வருவதற்காக போலந்து எல்லையை கடக்க முயன்ற இந்திய மாணவர்கள் மீது உக்ரைன் ராணுவம் கடுமையான தாக்குதல் நடத்தியதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்திய மாணவர் ஒருவரை உக்ரைன் ராணுவ வீரர் எட்டி உதைக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. அத்துடன் எல்லையை கடக்க முயன்ற இந்திய மாணவிகள் சிலரை தலைமுடியை பிடித்து இழுத்து உக்ரைன் படைகள் தாக்கியதாகவும், இரும்பு கம்பிகளை கொண்டு தாக்கியதில் சில மாணவிகளுக்கு எலும்புமுறிவு ஏற்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின்றன. இதனால் உக்ரைனில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “உக்ரைனில் இந்திய மாணவர்கள் தாக்கப்படுவதாக வரும் செய்திகள் பெரும் கவலையளிக்கின்றன. தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் உள்ளிட்டோரை பாதுகாப்பாக மீட்பதற்கான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் காலம் தாழ்த்தாமல் மேற்கொள்ள வேண்டும். தமிழக அரசு இப்பிரச்னையில் கூடுதல் அக்கறைக் காட்டுவது அவசியம். மீட்கப்பட்டு தாயகம் திரும்பும் மாணவர்களுக்கு விமானநிலையத்தில் நின்றுகொண்டு தமிழக அமைச்சரும், அதிகாரிகளும் பூங்கொத்து கொடுத்து வரவேற்பதற்குப் பதிலாக டெல்லிக்குச் சென்று உக்ரைனில் சிக்கித்தவிக்கும் எஞ்சிய மாணவர்களை மீட்பதற்கான பணிகளை மத்திய அரசோடு இணைந்து மேற்கொள்வதுதான் இப்போதைய உடனடித்தேவை. எனவே, வெற்று விளம்பரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் ஆக்கப்பூர்வமாக செயல்படவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )