தலைப்பு செய்திகள்
நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.
மார்ச் 1ஆம் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் மகாசிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க மாவட்ட ஆட்சியர் அரவிந்த் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் குறைந்த நிலையில் பள்ளி கல்லூரிகளுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. இதனையொட்டி மார்ச் ஒன்றாம் தேதி தமிழகம் முழுவதும் கொண்டாடப்படும் மகாசிவராத்திரியன்று பக்தர்கள் கண்விழித்து இறைவனுக்கு பூஜை செய்து வருவது வழக்கம்.
இந்த சிறப்பு நிகழ்ச்சியாக கன்னியாகுமரியில் சிவாலய ஓட்டம் நடைபெறும். இதில் தமிழகம் முழுவதுமிருந்து அதிக அளவில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வார்கள். இதையடுத்து கன்னியாகுமரி மாவட்டம் மார்ச் 1ஆம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அரசு பணியாளர்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அரசு தலைமை மற்றும் கிளை கருவூலங்களில் குறிப்பிட்ட அளவில் பணியாளர்களை வைத்து இயங்கும் எனவும் இதனை ஈடு செய்யும்வகையில் கன்னியாகுமரியில் மட்டும் மார்ச் 12-ஆம் தேதி முழு வேலை நாளாக கருதப்படும் என்று கன்னியாகுமரி மாவட்ட வட்டாட்சியர் அரவிந்த் கூறியுள்ளார்.