BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

10, 11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அட்டவணை பள்ளிக்கல்வி துறை அமைச்சர் நாளை வெளியிட உள்ளனர்.

கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டன. பொதுத்தேர்வுகளும் முறையாக நடத்தப்படவில்லை. கடந்த கல்வியாண்டில் 1 முதல் 9 வரையிலான மாணவர்களுக்கு இறுதியாண்டு தேர்வுகள் நடத்தப்படவில்லை. அதேபோல கடந்தாண்டு ஏப்ரல், மே மாதங்களில் கொரோனா இரண்டாம் அலை உச்சத்தில் இருந்ததால் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகளையும் அரசால் நடத்த முடியவில்லை. மாணவர்களின் முந்தைய தேர்வுகளின் அடிப்படையில் மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு தேர்வு முடிவுகள் வெளியாகின.

அதனை வைத்தே கல்லூரிகளில் இந்தாண்டுக்கான மாணவர் சேர்க்கையும் நடைபெற்றது. எனினும் இந்த கல்வியாண்டில் பொதுத்தேர்வு நடத்திட வேண்டும் என தமிழக அரசு தீர்க்கமாக இருந்தது. அதற்கான முன்னேற்பாடாக 10,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டன. மேலும் காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, திருப்புதல் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது. இச்சூழலில் தான் ஜனவரி மாதம் கொரோனா 3ஆம் அலை ஏற்பட்டது. இதன் காரணமாக இந்த ஆண்டும் பொதுத்தேர்வு நடத்தப்படுமா என்கிற சந்தேகம் எழுந்தது.

இதுதொடர்பாக அவ்வப்போது அமைச்சர் அன்பில் மகேஸிடம் கேள்வியெழுப்பப்பட்டது. அத்தனை பேட்டிகளிலும் பொதுத்தேர்வு கட்டாயமாக நடத்தப்படும் என அவர் உறுதியாக கூறினார். ஏனென்றால் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் டோஸ் செலுத்தப்பட்டுவிட்டது. இரண்டாம் டோஸும் விரைவில் செலுத்தப்படவுள்ளது. தற்போது ஒமைக்ரான் பரவலும் குறைந்துவிட்டது. இதன் காரணமாகவே அவர் உறுதியாக நடக்கும் என்று கூறினார். அந்த வகையில் 10, 11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அட்டவணையை அவர் நாளை வெளியிட உள்ளதாக பள்ளிக்கல்வி துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )