தலைப்பு செய்திகள்
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் உக்ரைனில் சிக்கி தவிக்கும் தனது மகளை மீட்க கண்ணீர் மல்க பேசியுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம்
உளுந்தூர்பேட்டையில் அன்னை தெரசா நகர் பகுதியை சேர்ந்தவர் அன்புசெல்வன் இவர் வழக்கறிஞர் பணியாற்றி வருகிறார்.
இவரது இரண்டாவது மகள் பிரபாவதி, உக்ரைனில் மருத்துவம் பயின்று வருகிறார்.
தற்போது உக்ரைன்-ரஷியா இடையே போர் நடைபெற்று வரும் நிலையில் பிரபாவதி தனது தந்தையை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, தன்னுடன் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் தங்கி படிக்கின்றனர்.
இங்கு எப்போதும் குண்டு வெடிக்கும் சத்தம் இடைவிடாது கேட்டுக்கொண்டே இருப்பதால் தங்களுக்கு மிகவும் பயமாக உள்ளது. அதனால் இந்திய அரசாங்கத்திடம் முறையிட்டு, உடனடியாக தங்கள் அனைவரையும் மீட்க வேண்டும் என கண்ணீர் மல்க பேசியுள்ளார்.
இதனை தொடர்ந்து அன்புசெல்வன், உக்ரைனில் சிக்கி தவிக்கும் தனது மகளை மீட்க கோரி கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் அவர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இதனால் பிரபாவதி உக்ரைனில் சிக்கி தவிப்பது அந்த குடும்பத்தினரை பெறும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.