தலைப்பு செய்திகள்
வாணியம்பாடியில் அதிமுக வேட்பாளர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் கழக நிர்வாகிகளுடன் சென்று தூய்மைப் பணியில் ஈடுபட்டும், தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரத்தில் ஈடுபட்டு இலவசமாக காய்கறி பொதுமக்களுக்கு வழங்கி நூதன முறையில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
ஆரத்தி எடுத்து பொது மக்கள் உற்சாக வரவேற்பு
நடைபெற உள்ள நகர்புற தேர்தலில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட 5வது வார்டு சென்னாம்பேட்டை பகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பிரகாசம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் மற்றும் கழக முக்கிய நிர்வாகிகளுடன் சென்று அங்குள்ள விநாயகர் மற்றும் நாகாலம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு பின்னர் வீடு வீடாகச் சென்று அதிமுகவின் சாதனைகளை உள்ளடக்கிய துண்டுப்பிரசுரங்களை வழங்கி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது அதிமுக வேட்பாளர் வீதியில் தூய்மை பணியாளர்களுடன் இணைந்து தூய்மை பணியில் ஈடுபட்டும், தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்து அப்பகுதி மக்களுக்கு காய்கறிகளை வழங்கினார் அப்போது அதிமுக வேட்பாளர் மற்றும் கழக நிர்வாகிகளுக்கு அப்பகுதி மக்கள் பட்டாசு வெடித்து ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பிரச்சாரத்தின் போது முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோ.வி சம்பத்குமார் ,நகர கழக செயலாளர் சதாசிவம் மற்றும் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.