BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

வீட்டுவசதி வாரிய குடியிருப்புகளை ஆய்வு செய்யும் ஆட்சியர் சிவராசு.

திருச்சி மாவட்டம் மன்னார்புரம் சர்க்யூட் ஹவுஸ் காலனி வளாக பகுதியில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் 103.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்புக் கட்டிடங்களின் கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் சிவராசு செய்தியாளர்களிடம் பேசுகையில், 3.3 ஏக்கர் பரப்பளவில் 474 குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது. 8 சதவீத வீட்டு வாடகைப்படியின் அடிப்படையில் அரசு ஊழியர்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படும். முன்னுரிமை அடிப்படையில் ஏற்கனவே குடியிருந்தவர்கள் மற்றும் தற்போது குடியிருப்பு கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு வழங்கப்படும். கார் பார்க்கிங் வசதியுடன் மாதம் ஆயிரம் ரூபாய் பராமரிப்பு செலவுக்காக அவர்களிடம் வசூலிக்கப்படும். தற்போதைய அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணிகள் டிசம்பர் மாதத்துடன் நிறைவு- பெறும் என்றும், அதன் பின்னர் காஜாமலை காலனி குடியிருப்புகள் அகற்றப்பட்டு கட்டுமானப் பணி தொடங்கும் என்றார்.

தமிழகத்தைச் சேர்ந்த 4800 பேர் உக்ரைனில் சிக்கியுள்ளனர், திருச்சியை சேர்ந்த 4 பேர் உக்ரைனில் சிக்கித் தவிக்கின்றனர், அவர்களின் விபரம் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது, உக்ரைனில் சிக்கி தவித்து வரும் தமிழக மாணவர்களை மீட்கும் முயற்சிகளில் மத்திய அரசுடன், தமிழக அரசும் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. தங்களது பிள்ளைகளை பத்திரமாக மீட்கக்கோரி பெற்றோர் சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தொடர்ந்து வேண்டுகோள் விடுக்கப்பட்டு வருகிறது.

இதையொட்டி, சென்னையில் கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த கட்டுப்பாட்டு அறைக்கு நேரில் சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து காணொலி காட்சி மூலம் உக்ரைனில் சிக்கியிருக்கும் மாணவர்களிடம் பேசி நம்பிக்கை அளித்தார். தொடர்ந்து உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களை மீட்கும் முயற்சியில் தமிழக அரசு முழு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. விரைவில் அனைத்து மாணவர்களையும் பாதுக்காப்புடன் மீட்கபடும் என்றார். இதனை தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் நீண்ட நாட்களாக மக்கள் எதிர்பார்க்கும் அரிஸ்டோ மேம்பாலம் அதற்கான கட்டுமான பணிக்கான டெண்டர் முடிவுற்றது என்றார். மேலும் மத்திய பேருந்து நிலைய மேம்பாலம் அடுத்த மாதம் நீண்ட காலமாக பாதியில் நிற்கும் பணிகள் தொடங்கப்படும் விரைவில் அனைத்து பணிகளும் முடிக்கபட்டு மக்களின் பயன்பாட்டிற்க்கு கொண்டு வருவதற்கான பணிகளை தீவிரபடுத்தியுள்ளோம் என்றார். மேலும் அரை சுற்றுவட்ட சாலையை பொறுத்த அளவு துவாக்குடியிலிருந்து மாத்தூர் வரை உள்ள சாலை பணிகள் முடிவுற்று போக்குவரத்து திறந்துவிடப்பட்டுள்ளது. மாத்தூரிலிருந்து பஞ்சப்பூர் வரயுள்ள சாலையில் ஒரே ஒரு ரயில்வே மேம்பால பணிகள் முடிவடைந்தவுடன் போக்குவரத்துக்கு விடப்படும் என ஆட்சியர் சிவராசு தெரிவித்தார்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )