BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

திருச்சி ஒரேநாளில் 11 பேருக்கு கொரோனா தொற்று.

திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை கொரோனா தொற்றால் பாதிக்கபட்டு இதுவரை 178 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தமிழகத்தில் கொரோனா, ஒமிக்ரான் பாதிப்பு சற்று குறைந்து வருவதால் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை மாநில அரசு அமல்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் மக்களுக்கு தொற்று பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிக்கபட்டுள்ளது. குறிப்பாக மக்கள் கூட்டம் கூடுவதற்கு தடை விதிக்கபட்டுள்ளது. முககவசம் , சமூக இடைவெளியை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும் என சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் மக்கள் மிகுந்த கவனமுடன் செயல்பட வேண்டும், அலட்சியமாக மக்கள் செயல்பட கூடாது என்றனர். குறிப்பாக அரசு கூறிய விதிமுறைகளை பொதுமக்கள் முழுமையாக கடைபிடிக்க வேண்டும், இல்லை என்றால் நோய் தொற்று அதிக அளவில் பரவி பாதிப்பை ஏற்படுத்தும். கொரோனா தடுப்பூசியை அனைவரும் செலுத்திக்கொள்ள வேண்டும் என்று குறிப்பாக சிறார்களும் தடுப்பூசியினை தவறாமல் செலுத்திக்கொள்ள வேண்டும். நோய் தொற்றில் இருந்து நம்மை காத்துக்கொள்ள தற்போது ஒரே தீர்வு தடுப்பூசி தான் என அரசு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை இம்மாதம் தொடக்கத்தில் இருந்து கொரோனா தொற்றால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை சற்று குறைந்து வருகிறது. அதேசமயம் இறப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது. இதனை தொடர்ந்து இன்று கொரோனா தொற்றால் 11 பேர்கள் பாதிக்கபட்டுள்ளனர். அதேசமயம் 35 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று உயிரிழப்பு இல்லை என்பது சற்று ஆறுதல் . இதனை தொடர்ந்து மருத்துவமனையில் 178 பேர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் இதுவரை தொற்றால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 94857, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 93519, இறந்தவர்களின் எண்ணிக்கை 1160 ஆகும். குறிப்பாக திருச்சி மாவட்டத்தில் இதுவரை 5 நபர்களுக்கு ஓமிக்ரான் தொற்றால் பாதிக்கபட்டு சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கொரோனா தொற்றை விட ஒமிக்ரான் தொற்று அதிக வேகமாக பரவ கூடும் என்பதால் பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். குறிப்பாக ஓமிக்ரான் தொற்று பற்றி அச்சப்பட தேவையில்லை. பொதுமக்கள் அரசு கூறும் விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். முக கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். பொது இடங்களில் கூட்டமாக மக்கள் இருப்பதை தவிர்க்க வேண்டும். மேலும் இரண்டு தவணை தடுப்பூசிகளை கட்டாயமாக எடுத்துக் கொள்ள வேண்டும் இவற்றை நாம் முழுமையாக கடைப்பிடித்தாலே தொற்றில் இருந்து நம்மை நாம் காத்துக் கொள்ள முடியும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக கடந்த சில மாதங்களாக பொதுமக்கள் அலட்சியத்தினால் தற்போது கொரோனா தொற்று சற்று குறைந்து வருகிறது. இந்நிலையில் மக்கள் மிகுந்த அலட்சியபோக்கில் செயல்பட்டு வருகிறார்கள் இதனால் மீண்டும் தொற்று அதிக அளவில் பர வாய்ப்பு உள்ளது. ஆகையால் மக்கள் அலட்சியப்போக்கு தவிர்த்து பாதுகாப்பாக அரசு கூறும் நடவடிக்கைகளுக்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )