தலைப்பு செய்திகள்
தஞ்சையில் 127 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த 100 கோடி ரூபாய் மதிப்பிலான யூனியன் கிளப் கட்டடம் பூட்டி சீல் வைக்கப்பட்டது.
தஞ்சையில் 127 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த 100 கோடி ரூபாய் மதிப்பிலான யூனியன் கிளப் கட்டடம் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்ததாக கூறி இன்று பூட்டி சீல் வைக்கப்பட்டது.
தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் எதிரே உள்ள தஞ்சாவூர் யூனியன் கிளப் கடந்த 1895 ம் ஆண்டு முதல் 127 ஆண்டுகளாக இயங்கி வந்தது கிளப் உறுப்பினர்கள் கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்தி வந்தனர் இந்நிலையில் 100 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த இடத்தை மாநகராட்சி ஏற்கனவே கைப்பற்றியது.
இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் தடையாணை வாங்கப்பட்டு இருந்த நிலையில் பொது கேளிக்கை சட்டப்படி செயல்படாமல் இயங்கி வந்ததாக கூறி வருவாய் துறையினர் இன்று தஞ்சாவூர் யூனியன் கிளப் முன்பு தண்டோரா அடித்து அறிவிப்பாணை செய்ததோடு யூனியன் கிளப்பை பூட்டி சீல் வைத்தனர்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் மற்றும் அதிகாரிகள் இந்த பணியில் ஈடுபட்டனர் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள சுதர்சன சபா ஏற்கனவே மாநகராட்சியால் மீட்கப்பட்ட நிலையில் தஞ்சாவூர் யூனியன் கிளப் தற்போது மீட்கப்பட்டுள்ளது பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் மீட்கப்படும் வருவது குறிப்பிடத்தக்கது.