தலைப்பு செய்திகள்
முதுகுளத்தூர் காமராஜர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் தேசிய அறிவியல் தின விழா.
முதுகுளத்தூர் காமராஜர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் தேசிய அறிவியல் தின விழா நடைபெற்றது.
தாளாளர் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மாவட்ட தலைவர் மு. அய்யாச்சாமி, அவர்கள் தலைமை வகித்தார். பொருளாளர் முத்துமுருகன் ,பள்ளி மேலாளர் ரவீந்திரன் அவர்கள் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர்
D.அன்புக்கனி அவர்கள் வரவேற்புரை வழங்கினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் செயலாளர்
நல்லாசிரியர் S.துரைப்பாண்டியன் அறிவியல் தின விழாவில் சிறப்பு உரையினை நிகழ்த்தினார்.
காவல் துறை துணை கண்காணிப்பாளர் N.சின்னக்கண்ணு, பரிசு மற்றும் அறிவுரைகளை சிறப்புடன் வழங்கினார்.
காவல் துறை ஆய்வாளர் V.மோகன். வாழ்த்துரை வழங்கினார்.
மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் சிலம்பாட்டம் நடைபெற்று, வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு பரிசுகளும் , சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.