BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

ரஷ்யா- உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன?

உக்ரைன் – ரஷ்யா இடையேயான அமைதி பேச்சு வார்த்தை முடிந்துள்ள நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தில் இணையும் விண்ணப்பத்தில் உக்ரைன் அதிபர் கையெழுத்து.

ரஷ்ய மற்றும் உக்ரேனிய அதிகாரிகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தை முடிவடைந்துள்ளதாக ரஷ்ய செய்தி நிறுவனமான TASS தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா 5 வது நாளாக போர் தொடுத்து வருகிறது. இருதரப்புக்கும் இடையே கடுமையான சண்டை நடந்து வரும் நிலையில், இரு நாடுகளும் அமைதி பேச்சு வார்த்தைக்கு ஒத்துக் கொண்டன. இதனையடுத்து, அமைதி பேச்சு வார்த்தை ரஷ்யாவின் நட்பு நாடான பெலாரஸ் எல்லையில் இன்று நடைபெற்றது.

இந்த பேச்சு வார்த்தையில் ரஷ்யா மற்றும் உக்ரைன் அதிகாரிகள் கலந்துக் கொண்டனர். சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற இந்த அமைதிப் பேச்சுவார்த்தை நிறைவு பெற்றுள்ளது.

இந்த பேச்சு வார்த்தையில், உக்ரைன் மீதான போரை உடனடியாக ரஷ்யா நிறுத்த வேண்டும். உக்ரைனில் உள்ள ரஷ்ய படைகள் முழுமையாக வெளியேற உத்தரவிட வேண்டும் என உக்ரைன் வலியுறுத்தியது.

இதனிடையே, உக்ரைன், கார்கிவ் பகுதியில் ரஷ்யப் படைகளின் தாக்குதலில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். வான்வெளி தாக்குதலில் பொது மக்கள் 5 பேரும், ராணுவ வீரர்கள் 2 பேரும் உயிரிழந்துள்ளனர். மேலும் பொது மக்கள் 22 பேரும், ராணுவ வீரர்கள் 20 பேரும் படுகாயம் அடைந்துள்ளனர்

உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இரவு 8 மணி முதல் காலை 7 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வான்வெளி தாக்குதலுக்கான அபாய ஒலி எழுப்பப்பட்டால் மட்டுமே, மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வெளியே வர வேண்டும். சிறப்பு அனுமதியுடன் வாகனங்களில் செல்ல அனுமதிக்கப்படும் என உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைனை இணைத்துக் கொள்ள கோரிய விண்ணப்பத்தில் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி கையெழுத்து இட்டுள்ளார்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )