தலைப்பு செய்திகள்
நியாயவிலைக்கடைகளில், தகவல் பலகை அமைக்க உத்தரவு.
நியாயவிலைக்கடைகளில் பொருட்களின் இருப்பு குறித்த தகவல்கள், அமைச்சர் மற்றும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் கொண்ட தகவல் பலகை அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
நியாயவிலைக் கடைகளில் பராமரிக்க வேண்டிய அறிவிப்பு பலகைகள் தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையாளர் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், பொது வினியோகத் திட்டத்தின் கீழ் செயல்படும் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் குடும்ப அட்டைதாரர்கள் தெரிந்துகொள்ளும் வகையில் விவரங்கள் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என கூறியுள்ளார்.
வேலை நேரம், இன்றியமையாத பண்டங்கள் இருப்பு விவரம், விநியோகம் செய்யப்பட்ட விவரம், விற்பனை விலை உள்ளிட்டவை தகவல் பலகையில் இடம்பெறவேண்டும் எனவும், நியாயவிலைக்கடை தொடர்பாக புகார் அளிக்க உணவுத்துறை அமைச்சர், உணவுத்துறை செயலாளர், உணவுப்பொருள் வழங்கல் ஆணையாளர் உள்ளிட்டோரின் எண்கள் இடம்பெறவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
நியாயவிலைக்கடை தொடர்பாக புகார் அளிக்க உணவுத்துறை அமைச்சர் 044-25671427, உணவுத்துறை செயலாளர் 044-25672224, உணவுப்பொருள் வழங்கல் ஆணையாளர் 044-28592255 உள்ளிட்டோரின் எண்கள் இடம்பெறவேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.