BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

ஆசிரியர்களுக்கு கட்டாய விடுப்பு; கல்வி துறை அதிரடி உத்தரவு!

 

ஆசிரியர்களுக்கு கட்டாய விடுப்பு அளித்து கல்வி துறை பிறப்பித்துள்ள உத்தரவு பள்ளி மற்றும் மாணவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். விரைவில் நூற்றாண்டு விழா காண இருக்கும் இந்த பள்ளியில் 50க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த அரசு பள்ளிக்கு யாரும் எதிர்பாராத வகையில் கடலூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பூபதி நேற்று திடீரென வருகை தந்து ஆய்வு மேற்கொண்டார். அங்கு பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் பயிலும் மாணவர்கள் விபரங்களை கேட்டறிந்தார்.

 

நன்றி மறந்த உதயநிதி ஸ்டாலின்; முஸ்லிம்கள் போர்க்கொடி!

அப்போது பள்ளிக்கூடத்திற்கு 16 ஆசிரியர்கள் தாமதமாக வந்தது தெரிய வந்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த கல்வி அதிகாரி தாமதமாக வந்த 16 ஆசிரியர்களுக்கு கட்டாய விடுப்பு கொடுத்து வீட்டுக்கு அனுப்பினார்.

மேலும், இதுபோறு இனிமேலும் தாமதமாக வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார். இதை தொடர்ந்து வகுப்பறைகளின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி பூபதி ஆய்வு நடத்தி விட்டு பள்ளி மாணவர்களுக்கு கணித வகுப்பு நடத்தினார்.

அதிர்ச்சியில் உறைந்த விஜயகாந்த்; முன்பே எச்சரித்தது ‘சமயம் தமிழ்’!

மேலும் பள்ளி மாணவர்களின் சந்தேகங்களுக்கு மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி உரிய விளக்கம் அளித்தார். அப்போது மாணவர்கள், ஆசிரியர் ஒருவர் சரியாக பள்ளிக்கு வருவதில்லை என குற்றம்சாட்டினர்.

இதையடுத்து அனைத்து ஆசிரியர்களையும் வரவைழைத்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பூபதி, அவர்களுக்கு அறிவுரை மற்றும் ஆலோசனை கூறி பள்ளியின் வளர்ச்சி, மாணவர்களின் கல்வியில் அதிகம் கவனம் செலுத்துமாறு ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டார். இது, அரசு பள்ளியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )