தலைப்பு செய்திகள்
திருச்சி
உள்ளாட்சி தேர்தலில் வாக்குச்சாவடிகளில் பணியாற்றுபவர்களுக்கான கொரொனா பாதுகாப்பு உபகரணங்கள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெறுகிறது. திருச்சி மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி,
5நகராட்சிகள்,
14பேரூராட்சிகளில் தேர்தல் நடைபெறுகிறது. கொரொனா காலத்தில் தேர்தல் நடைபெறுவதால் அனைத்து வித கொரொனா பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.
அதன்படி தேர்தல் நடைபெறும் நாளில் வாக்குச்சாவடிகளில் பணியாற்றுபவர்களுக்காக கிருமி நாசினி, முக கவசம், கையுறை, முழு கவச உடை உள்ளிட்டவை பயன்படுத்தப்பட உள்ளது. அதே போல வாக்கு அளிக்க வரும் வாக்காளர்களுக்கு கையுறையும் வழங்கப்பட உள்ளது.
அதற்காக இந்த கொரொனா பாதுகாப்பு உபகரணங்கள் அடங்கிய பொருட்கள் அந்த அந்த உதவி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களின் அலுவலகத்திற்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்டது. அந்த பொருட்கள் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கன் மூலம் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட உள்ளது.