தலைப்பு செய்திகள்
தஞ்சாவூரில் மழலையர் பள்ளிகள் திறப்பு பள்ளி குழந்தைகள் உற்சாகம் .
தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரனோ பாதிப்பால் மழலையர் பள்ளிகள், தொடக்கப்பள்ளி, மேல்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரிகள் என மாணவர்களின் நலன் கருதி மூடப்பட்டன.
பின்னர் கொரனோ பாதிப்பு குறையத் தொடங்கியதும் அதற்கேற்றார்போல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் செயல்படத் தொடங்கின ஆனால் மழலையர் பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தன, ஆனால் மழலையர் பள்ளி எல்கேஜி யுகேஜி குழந்தைகள் ஆன்லைனில் கல்வி கற்று வந்தனர், இந்நிலையில் கொரனோ கட்டுப்பாடு தளர்வாக தமிழக அரசு அனைத்து மழலையர் பள்ளிகளையும் திறக்க உத்தரவிட்டிருந்தது, இதனையடுத்து தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மழலையர் பள்ளிகள் திறக்கப்பட்டன.
பள்ளிக்கு வந்த குழந்தைகளை ஆசிரியர்கள் உற்சாகமாக வரவேற்று சந்தனம், ரோஜாப்பூ , இனிப்பு உள்ளிட்டவைகளை வழங்கி வரவேற்றனர் அவர்களுக்கு மேலும் கொரனோ பாதுகாப்பு நடவடிக்கைகளாக வெப்பமானி பரிசோதனை செய்யப்பட்டு முக கவசம், சானிடைசர் ஆகியவை வழங்கப்பட்டது.