தலைப்பு செய்திகள்
திருச்சியில் மதுபான கடை திறப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு .
திருச்சியில் மதுபான கடை திறப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு – அகற்றக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு.
திருச்சி மாநகராட்சி தாராநல்லூர் பகுதி இந்த பகுதியில் கிருஷ்ணாபுரம் சாலையில் புதிய மதுபான கடை திறப்பதற்கு பணிகள் நடைபெற்று வருகிறது எனக் கூறப்படுகிறது.
இந்த பகுதியில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிப்பதால் பெண்கள், சிறுவர்கள், மற்றும் வியாபாரிகள், டாஸ்மார்க் கடை அமையவிருக்கும் தெருக்களில்
பல்வேறு தேவைகளுக்காக பயணிக்கும் சூழ்நிலை உள்ளது.
மேலும், இந்த கடையின் அருகே வழிபாட்டுத் தலங்கள், பள்ளிக்கூடம் உள்ளதால் பள்ளிக் குழந்தைகள் அதிக அளவு செல்லும் சாலையாக இருக்கின்றது. எனவும் இதனை அரசு மறுபரிசீலனை செய்து கடையை அமையவிருக்கும் பணியை தடைசெய்து
வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என தாரநல்லூர் பகுதி மக்கள் மற்றும் கிருஷ்ணாபுரம் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் பல்வேறு தரப்பினர் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு அவர்களிடம் நேரில் மனு வழங்கினர்.
தொடர்ந்து அகற்ற மறுத்தால் போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்தனர்.