BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

எம்.கே தியாகராஜபாகவதரின் 113 ஆவது பிறந்தநாள்.

எம்.கே தியாகராஜபாகவதரின் 113 ஆவது பிறந்தநாள் – சமாதியில் நிர்வாகிகள், ரசிகர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்


தமிழத்திரையுலகின் முடிசூடா மன்னராக திகழ்ந்த ஏழிசை மன்னர் எம்.கே.தியாகராஜ பாகவதரின் 113 பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. மாயவரம் கிருஷ்ணமூர்த்தி தியாகராஜபாகவதர் மக்கள் உள்ளங்களைக் கொள்ளைகொண்டமையால் எம்.கே.டி என அன்புடன் அழைக்கப்பட்டார்.


தான் கொண்ட பாடல்திறனால் நாடக நடிகனாக உருவாகி திரையுலகில் பிரவேசித்து தமிழ்சினிமா வரலாற்றில் தன்பாடற்திறனாலும், தேர்ந்தெடுத்து நடித்த கதாபாத்திரங்களினாலும் தனி அத்தியாயத்தை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல், அக்கால ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.
பவளக்கொடி, சாரங்கதா, சத்தியசீலன், சிந்தாமணி, அம்பிகாபதி, திருநீலகண்டர், அசோக்குமார், சிவகவி, ராஜமுக்தி, அமரகவி, சிவகாமி என பல வெற்றி படங்கள் நடித்தாலும் ஏம்.கே.டி நடிப்பில் வெளியான ஹரிதால் 3தீபாவளியை தாண்டி வெற்றிகரமாக ஓடியும், 10லட்சரூபாய் வசூலித்தும் சரித்திர சாதனைப்படைத்தது.

இப்படி பல்வேறு பெருமைகளுக்குச் சொந்தக்காரரான எம்.கே.தியாகராஜபாகவதரின் 113 ஆவது பிறந்தநாளையொட்டி திருச்சி செந்தண்ணீர்புரத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் அவரது ரசிகர்கள், விஸ்வகர்மா மகாஜனசபை நிர்வாகிகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் தீபமேற்றி வழிபட்டு, மலர்தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )