BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

சேலம் ஏற்காட்டில் மாற்றுத்திறனாளிக்கான பாரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

சேலம் மாவட்டம் ஏற்காட்டில்
அரசு மாதிரிப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மஞ்சகுட்டை பகுதியை சேர்ந்த சிவக்குமார் மகள் இன்பத்தமிழி(14) சென்னையில் நடக்கும் 14 வயதிற்குட்பட்ட மாற்றுத்திறனாளிக்கான பாரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் ஓட்டப்பந்தயம் மற்றும் கல்லெறிதல் போட்டியில் பங்கேற்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இவரின் தந்தை சிவக்குமார் வீட்டிலேயே இருசக்கர வாகனம் பழுதுபார்க்கும் வேலை செய்து வருகிறார் இதுபற்றி தலைமை ஆசிரியை அமுதா அவர்கள் கூறும் பொழுது இம்மாணவி ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து தனது குடும்ப சூழ்நிலையை உணர்ந்து முறையான பயிற்சி எடுத்து இப்போட்டியில் பங்கேற்க தேர்ந்தெடுக்கப்பட்டது மிகவும் சந்தோஷமாக உள்ளது எனவும் இம் மாணவியின் பயிற்சியாளர் உலகநாதன் சிறந்த முறையில் பயிற்சி கொடுத்து மாணவியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தார் எனவும் போட்டி நடந்த பிறகு மாணவி கண்டிப்பாக பெரிய சாதனை செய்வார் என நம்பிக்கை தெரிவித்தார் மாணவிக்கு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகள் அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்து வழியனுப்பி வைத்தனர்

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )