BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

ஸ்ரீபெரும்புதூர் தனிநபர்களின் ஆக்கிரமிப்பில் 6 கோடி மதிப்புள்ள 6ஏக்கர் நிலம் மாவட்ட வருவாய்த்துறையினர் அதிரடியாக மீட்டனர்.

ஸ்ரீபெரும்புதூர் அருகே தனிநபர்களின் ஆக்கிரமிப்பில் இருந்த 6 கோடி மதிப்புள்ள 6ஏக்கர் நிலம் மாவட்ட வருவாய்த்துறையினர் அதிரடியாக மீட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மண்ணூர் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான 6 கோடி மதிப்பிலான ஆறு ஏக்கர் நிலத்தை அதே பகுதியை சேர்ந்த பார்த்திபன் மற்றும் அஞ்சா கோவிந்தசாமி ஆகியோர் ஆக்கிரமித்து வைத்திருந்தனர்.

இந்நிலையில் இந்த நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி நெமிலி கிராமம் மேவலுர்குப்பம் கிராமம் மற்றும் செல்லபெருமாள் நகரில் ரசிக்கும் நாற்பத்தி நான்கு இருளர் குடும்பங்களுக்கு இலவச பட்டா வழங்க அரசு மூலம் உத்தேசிக்கப்பட்ட நிலத்திலுள்ள ஆக்கிரமிப்புகளை மாவட்ட வருவாய் துறையினர் ஸ்ரீபெரும்புதூர் போலீசார் பாதுகாப்புடன் அகற்றினர்.

மேலும் இந்த ஆறு ஏக்கர் நிலத்தை இதுவரை ஆக்கிரமித்து கையகப்படுத்தியவர்கள் ஆக்கிரமிப்பை அகற்ற விடாமல் தடுத்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )