BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

கோவில்பட்டி அருகே விளாத்திகுளத்தில் ஆடு திருடும் கும்பலிடம் பேரம் பேசிய காவல் உதவி ஆய்வாளர்.

கோவில்பட்டி அருகே விளாத்திகுளத்தில் ஆடு திருடும் கும்பலிடம் பேரம் பேசிய காவல் உதவி ஆய்வாளர் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனதையடுத்து ஆயுதப்படைக்கு இடமாற்றம்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விளாத்திகுளம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் ஆடு திருடு போய் வருவதாக மாவட்ட காவல்துறைக்கு தொடர் புகார் வந்த வண்ணம் இருந்தது இதனை யடுத்து திருடம் மர்ம கும்பலை பிடிப்பதற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் தனிப்படை அமைக்கபட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேம்பார் சோதனை சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்த காவல்துறையினர் அவ்வழியாக வந்த வாகனத்தை சோதனை செய்ததில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஒத்தக்கடை பகுதியை சேர்ந்த சாத்தையன் மகன் செல்வராஜ் (55) மற்றும் காரைக்குடி கண்டனூர் ரோடு பகுதியை சேர்ந்த அழகர்சாமி மகன் ஆறுமுகம் (52) ஆகிய 2 பேரும் சேர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் பல பகுதிகளில் ஆடுகளை அவர்களது கார்களில் திருடி விற்பனை செய்தது தெரியவந்தது.

இதனையெடுத்து 2 பேரை கைது செய்து, அவர்களிடமிருந்த 14 ஆடுகள் மற்றும் திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட (50 லட்சம்) மதிப்புள்ள 3 கார்களையும் பறிமுதல் செய்தனர் இத் தனிப்படை பிரிவில் பணியாற்றி வந்த விளாத்திகுளம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கங்கைநாதபாண்டியன் கடந்த சில நாட்களுக்கு முன்பு அத் திருட்டு கும்பலை சேர்ந்த ஒருவரிடம் குண்டாஸ் போடாமல் இருக்க மூன்று லட்ச ரூபாய் பணம் கேட்டதாகவும் தங்கள் காரை விடுவிப்பதற்கான நடவடிக்கை எடுப்பதாக கூறி அக் கும்பலிடம் பேசிய அந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவரை ஆயுதப் படைக்கு பணியிட மாற்றம் செய்துள்ளார்.

பல்வேறு இடங்களில் ஆடுகளை திருடி விற்று பல லட்ச ரூபாய் சம்பாதித்து வரும் கும்பலிடம் காவல் உதவி ஆய்வாளர் பணம் கேட்டு பேரம் பேசிய ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )