தலைப்பு செய்திகள்
உலகப்புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரியகோவிலில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு பெருவுடையாருக்கு அபிஷேகம் மற்றும் நாட்டியாஞ்சலி.
உலகப்புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரியகோவிலில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு பெருவுடையாருக்கு அபிஷேகம் மற்றும் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி மிகச்சிறப்பாக நடைபெற்றது ஏராளமான பொதுமக்கள் சுவாமி தரிசனம்.
தஞ்சாவூர் பெரிய கோவில் என்றழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீபெரியநாயகி அம்மன் உடனாய ஸ்ரீபெருவுடையார் ஆலயம் உலகப்பிரசித்து பெற்று விளங்கி வருகிறது,இத்தகைய பிரசித்தி பெற்ற இக்கோவிலில் மஹாசிவராத்திரியை முன்னிட்டு பெருவுடையாருக்கு நான்கு கால அபிஷேக பூஜையும் அர்த்த ஜாமபூஜையும் சிறப்பாக நடைபெற்றது, மேலும் பெருவுடையாருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று மஹாதீபாரதனையும் காட்டப்பட்டது,மஹா சிவராத்திரி அன்று இரவு முழுவதும் நடைதிறந்து சுவாமி தரிசனம் நடைபெறும் அதைப்போல் பெரியகோவில் நந்தி மண்டபத்தில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியும் விடிய விடிய நடைபெற்றது இவ்விழாவில் 100க்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள் கலந்து கொண்டு நாட்டியாஞ்சலி செலுத்தினர் இந்நிகழ்ச்சியில் இந்தியாவின் பல்வேறு சாஸ்தீரிய நடனங்களான கதக் மோகினி ஆட்டம் ஒடிசி குச்சிப்புடி மற்றும் சத்திரியா பரதநாட்டியம் ஆகிய நாட்டிய நடனங்கள் நடைபெறுகிறது.
இதில் மும்பை பெங்களுர் சென்னை ஈரோடு தஞ்சை ஆகிய பகுதிகளிலிருந்து புகழ்பெற்ற நடன கலைஞர்கள் பங்கு பெற்றனர், இந்த நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியில் புகழ்பெற்ற நடன கலைஞர் பெங்களுர் நிருத்யா கலைப்பள்ளி காயத்ரி சந்திரசேகர் குழுவினரின் பரதநாட்டியம் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம செய்தும் நாட்டியாஞ்சலியை கண்டும் ரசித்தனர். நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியை தஞ்சை தென்னக பண்பாட்டு மையம் பிரகன்நாட்டியாஞ்சலி பவுண்டேசன் அரண்மனை தேவஸ்தானம் ஆகியவை இணைந்து நடத்துகிறது.