BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

மயிலாடுதுறையில் மகாசிவராத்திரியை முன்னிட்டு மயூர நாட்டியாஞ்சலி விழா.

மயிலாடுதுறையில் மயூர நாட்டியாஞ்சலி 200-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்பு.

மயிலாடுதுறையில் சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை சார்பில் மகாசிவராத்திரியை முன்னிட்டு அருள்மிகு மயூரநாதர் கோவிலில் 16-ஆம் ஆண்டு மயூர நாட்டியாஞ்சலி விழா நடைபெற்றது.

பிப்ரவரி 26 ஆம் தேதி தொடங்கிய மயூர நாட்டியாஞ்சலி நான்காம் நாள் நிகழ்ச்சியில் தஞ்சாவூர், சென்னை, சிவகாசி, கோயம்புத்தூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சார்ந்த குழுவினரின் பரதநாட்டியம் மற்றும் நாட்டிய நாடக நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

மயூரநாட்டியாஞ்சலி விழாவில் பங்கேற்ற கலைஞர்களை சப்தஸ்வரங்கள் அறக்கட்டளையின் கௌரவத் தலைவர் ஏஆர்சி விஸ்வநாதன், தலைவர் பரணிதரன், செயலாளர் விஸ்வநாதன் மற்றும் சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை அறங்காவலர்கள், நிர்வாகக்குழுவினர் நினைவு பரிசும், சான்றிதழும் வழங்கி பாராட்டினர்.

நான்கு நாட்கள் நடைபெற்ற மயூர நாட்டியாஞ்சலி விழாவில் நாட்டிய கலைஞர்கள், இசை கலைஞர்கள், கலை ஆர்வலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )