BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

யோகியின் தொகுதி உட்பட நாளை 6ஆம் கட்ட தேர்தல். உ.பியின் தலையெழுத்து என்ன.

உத்திரபிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஐந்து கட்ட தேர்தல்கள் முன்னதாகவே முடிவடைந்து விட்ட நிலையில் தற்போது ஆறாம் கட்ட தேர்தல் நாளை நடைபெற உள்ளது. அந்த வரிசையில் 10 மாவட்டங்கள் அடங்கிய 57 தொகுதிகளில் நாளை காலை 6 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற உள்ளது.

ஏற்கனவே நேற்று மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்ந்த நிலையில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா ஆகியோர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 676 வேட்பாளர்கள் போட்டியிடும் ஆறாம் கட்ட தேர்தலில் கோரக்பூர் தொகுதியில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் போட்டியிடுகிறார். யோகி ஆதித்யநாத் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவது இதுவே முதல் முறை என்பது நினைவுகூறத்தக்கது.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )