BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

“பிரதமரின் விவசாயிகள் நல காப்பீட்டு திட்டம்” நன்மைகள் என்னென்ன?

பிரதமரின் விவசாயிகள் நல காப்பீடு திட்டம் (PMFPY).

இந்தத் திட்டம் எதற்காக என்றால் இந்திய மக்கள் தொகையில் 85% விவசாயிகளின் நிலம் 2 ஹெக்டேருக்கும் குறைவாக இருக்கிறது மற்றும் 58% பேருக்கு வேளாண்மை என்பது முதன்மை வாழ்வாதாரமாகும். இதனைத் தொடர்ந்து கடந்த 2015ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் 207 வறட்சி மாவட்டங்கள் மற்றும் 300 ஒழுங்குமுறையற்ற மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களால் விவசாயிகள் பெரும் பொருளாதார இழப்புகளுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் விவசாயிகளின் பயிர் முதலீட்டை பாதுகாத்து மற்றும் வாழ்க்கைத் தொழில் மேம்படுத்தப்படும்.

இதனைத் தொடர்ந்து காப்பீடு செய்யப்பட்ட பயிர்களுக்கு பூச்சிகள், இயற்கை சீற்றங்கள் மற்றும் நோய்கள் போன்ற ஏதேனும் பாதிக்கப்பட்டால் இந்த பயிர்களுக்கு முழு காப்பீடு காப்பு மற்றும் நிதி உதவி வழங்கப்படும். இந்த திட்டம் அதிநவீன வேளாண்மை மற்றும் புதுமையான நடைமுறைகளை பின்பற்றுவதற்கு விவசாயிகளை ஊக்குவிக்கும். மேலும் விவசாயிகளுக்கு காப்பீடு கட்டுரை தவணை தொகையை குறைத்தல் மற்றும் வேளாண் துறை கடன் இருப்பதை உறுதி செய்யப்படும்.

விவசாய நல திட்டத்தின் பலன்கள் என்னவென்றால். உணவு பயிர்கள் (சிறுதானியங்கள், தானியங்கள், பயிர் (வகைகள்), எண்ணெய் வித்துக்கள் மற்றும் ஆண்டு வணிக/ ஆண்டு தோட்டக்கலை பயிர்கள்) போன்ற அனைத்து வகை பயிர்களுக்கும் இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு காப்பீடு கிடைக்கும். இதனை தொடர்ந்து இந்த திட்டத்திற்கான காப்பீடு கட்டணம் காப்பீடு செய்யப்பட்ட தொகையில் இருந்து வணிக பயிர்கள் மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கு 50% என்றும் கரீஃப் பருவ பயிர்களுக்கு 2% மற்றும் ரபி பருவ பயிர்களுக்கு 5% மட்டுமே ஆகும்.

இது எப்படி என்றால் 2 ஏக்கர் நிலத்திற்கு நெல் பயிரிட்டு இருந்தால் ஒரு லட்சம் காப்பீடு செய்யப்படுகிறது என்றாள் அதற்கான காப்பீடு கட்டணம் வெறும் 2000 மட்டுமே. இதனைத் தொடர்ந்து இத்திட்டத்திற்கு 2017 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் ரூபாய் 90 ஆயிரம் கோடி இதற்காக ஒதுக்கப்பட்டு 17 ஆயிரத்து 600 கோடி பட்ஜெட் கொண்டு விவசாயிகளுக்கு காப்பீடு வழங்க பாதுகாக்கிறது. இந்த திட்டம் அனைத்து விவசாயிகளுக்கும் (கடன் இருந்தாலும் இல்லையென்றாலும்) உண்டு.

இந்த காப்பீடு திட்ட நடைமுறை நடவடிக்கைகளையும் மோடி இல்லாமல் பயனுகந்த திட்டமாக இருக்க செய்வதற்கு விவசாயிகள் செயற்கையில் தொடங்கி காப்பீட்டு தொகை கொடுக்க செய்வது வரை மின்னணுரீதியாக செய்யப்படும். மேலும் விளைச்சல் இழப்புகள், விதை விதைப்பில் இருந்து தடுக்க பாடுவது, அறுவடைக்குப் பிந்திய இழப்புகள் அல்லது சேதங்கள், உள்ளூர் அளவிலான பேரிடர் பாதிப்புகள், பூச்சிகள், நோய்கள் போன்ற இடர்களுக்கு காப்பீடு செய்யப்படும்.

இந்நிலையில் இந்த விவசாய நல்ல காப்பீடு திட்டத்தில் சேர்வது எப்படி என்றால் முதலில் வங்கிகளில் சேமிப்பு கணக்கு வைத்திருந்தாள் விவசாயிகள் காப்பீடு திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் இத்திட்டத்தில் சேர்வதற்கு வங்கிகள், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் காப்பீடு நிறுவனங்களை தொடர்பு கொள்ளலாம்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )