BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

திருச்சி மாவட்டம் துவாக்குடி அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழகம் மற்றும் தூய்மை பணியாளர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருச்சி மாவட்டம் துவாக்குடியில் அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழகம் மற்றும் தூய்மை பணியாளர்கள் சார்பில்
நகராட்சியில் ஒப்பந்த துப்புரவு பணியாளர்களின் மேற்பார்வையாளர் பிரபாகரன் மற்றும், 12வது வார்டு உறுப்பினரும் திமுக நகர செயலாளருமான காயாம்பு மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
துவாக்குடி நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் 54 துப்புரவு பணியாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.
இந்த நிலையில், தூய்மை பணியாளர்கள் மிக நேரப் பணிகள் செய்வதாகவும், ஊதிய உயர்வு வழங்காமல் உள்ளதாலும், இதுகுறித்து துப்புரவு பணியாளர்கள் மேற்பார்வையாளர் பிரபாகனிடம் பலமுறை முறையிட்டும் அதனை அலட்சியப்படுத்தியதாகவும் மேலும் துப்புரவு பணியாளர்களை ஒருமையில் பேசியதாகவும் கூறப்படுகிறது.


இந்நிலையில் துவாக்குடி நகராட்சியில் வெற்றி பெற்ற வார்டு உறுப்பினர்களுக்கு பதவியேற்பு விழா நடைபெற்றது.
இதில் தூய்மை பணியாளர்கள் மற்றும் மக்கள் மறுமலர்ச்சி கழகத்தினர் துவாக்குடி நகர திமுக செயலாளரும் 12வது வார்டு உறுப்பினருமான காயாம்புவிற்கு வாழ்த்து தெரிவித்த சென்ற போது, அவரும் ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது.
இதனால் துவாக்குடி நகராட்சி அலுவலகம் முன்பு தூய்மை பணியாளர்கள் மற்றும் அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழகத்தினர் ஒன்று சேர்ந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது துவாக்குடி நகர தலைவராக காயாம்பு தேர்வு செய்யக்கூடாது என்றும் தூய்மை பணியாளர்களை ஒருமையில் பேசியதற்காக காயாம்பு மற்றும் ஒப்பந்த பணியாளர்களின் மேற்பார்வையாளர் பிரபாகரன் ஆகியோர் மன்னிப்பு கேட்க வேண்டும். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )