தலைப்பு செய்திகள்
வாணியம்பாடியில் நகர மன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து , தேசிய கீதம் புறக்கணிக்கபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாணியம்பாடி நகராட்சியில் நடைபெற்ற நகர மன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் புறக்கணிக்கபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசு விழாவில் தமிழ் தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதத்தை புறக்கணித்த நகராட்சி ஆணையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என AMIM மஜ்லிஸ் கட்சியினர் புகார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சியில் உள்ளாட்சி நகர்ப்புற தேர்தலில் வெற்றி பெற்ற 36 நகரமன்ற உறுப்பினர்களுக்கு நகராட்சி ஆணையாளர் ஸ்டான்லி பாபு நகர மன்ற கூட்ட அரங்கில் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
அப்போது நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன் தமிழ்தாய் வாழ்த்தும், நிகழ்ச்சி முடிந்த பின்னர் தேசிய கீதமும் புறக்கணிக்கப்பட்டது இதனை கண்டித்து AMIM மஜ்லிஸ் கட்சியை சேர்ந்த 19 வது வார்டு நகர மன்ற உறுப்பினர் நபிலா வக்கீல் அஹமத் என்பவர் பதவிப்பிரமான விழா நடந்து கொண்டிருக்கும் போதே கண்டனம் தெரிவித்து மனு ஒன்றை அளித்தார்.
இதுகுறித்து AMIM மஜ்லிஸ் கட்சியின் மாநில தலைவர் வக்கீல் அகமது செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில்
அரசு விழாவில் இந்திய அளவில் பேசக்கூடிய தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலும், தேசிய கீதம் வாணியம்பாடி நகராட்சியில் நடைபெற்ற நகரமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழாவில் புறக்கணிக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது தமிழக அரசின் விதிகளை மதிக்காமல் தமிழ் தாய் வாழ்த்தும், தேசிய கீதமும் புறக்கணிக்கப்பட காரணமாக இருந்த நகராட்சி ஆணையாளரை வன்மையாக கண்டிப்பதோடு தமிழக அரசு அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுகொண்டார்.