தலைப்பு செய்திகள்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற வார்டு உறுப்பினர்கள் ஆண்டிபட்டி பேரூராட்சியில் பதவியேற்பு.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற வார்டு உறுப்பினர்கள் ஆண்டிபட்டி பேரூராட்சியில் பதவியேற்பு
தமிழகம் முழுவதும் கடந்த 10 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19ஆம் தேதி அமைதியாக நடைபெற்று முடிந்தது . இந்த தேர்தலில் வெற்றி பெற்ற ஆண்டிபட்டி பேரூராட்சியின்18 வார்டுகளின் உறுப்பினர்கள் இன்று பேரூராட்சி அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் பதவியேற்றுக் கொண்டனர் . புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட வார்டு உறுப்பினர்களுக்கு பேரூராட்சி செயல் அலுவலரும் தேர்தல் அலுவலருமான சின்னசாமி பாண்டியன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார் .
இந்த நிகழ்ச்சியில் ஆண்டிபட்டி திமுக சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் திமுக 9 இடங்களிலும் , அதிமுக 5 இடங்களிலும் , இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடத்திலும் , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடத்திலும் , சுயேட்சைகள் இரண்டு இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர் . திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளான கம்யூனிஸ்ட் கட்சிகள் மொத்தமுள்ள 18 இடங்களில் 11 இடங்களை கைப்பற்றியுள்ளது . இதையடுத்து ஆண்டிபட்டி பேரூராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளை திமுக கூட்டணியே கைப்பற்றுகிறது .
நாளை மறுநாள் நடைபெற உள்ள பேரூராட்சி தலைவர் மற்றும் துணைத்தலைவருக்கான மறைமுக தேர்தலில் திமுக கூட்டணியினரே பதவி ஏற்பார்கள் என்பது உறுதியாகி உள்ளது . இன்று நடைபெற்ற வார்டு உறுப்பினருக்கான பதவியேற்பு விழாவையொட்டி ஆண்டிபட்டி காவல்துறை துணை கண்காணிப்பாளர் தலைமையில் போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.