BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

தரங்கம்பாடி பேரூராட்சியில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் பதவி பிரமாணம் நிகழ்ச்சி.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் பதவி பிரமாணம் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

தரங்கம்பாடி பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளுக்கு கடந்த 19-ஆம் தேதி தேர்தல் அறிவிக்கபட்டு வேட்புமனுக்கள் பெற்றப்பட்டது. இதில் 3,4,5 வார்டுகளுக்கு போட்டியின்றி உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் கமலக்கண்ணன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். மீதிதம் உள்ள 15 வார்டுகளுக்கும் கடந்த 19-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது . மயிலாடுதுறையில் உள்ள தேசிய துவக்க பள்ளியில் வாக்கு எண்ணிக்கை கடந்த மாதம் 22 -ஆம் தேதி நடைபெற்றது.

இதில் திமுக சார்பில் 14 உறுப்பினர்களும், திமுக கூட்டணி கட்சி விசிக 1, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 1 வார்டு உறுப்பினர்களும் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற வார்டு உறுப்பினர்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலரும் தரங்கம்பாடி பேரூராட்சி செயல் அலுவலர் கமலக்கண்ணன் தலைமையில் பதவிப்பிரமாணம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினர்.
இதில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம். முருகன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு வெற்றி பெற்ற தரங்கம்பாடி பேரூராட்சி வார்டு உறுப்பினர்களை வாழ்த்தி பேசினார்.

மேலும், இதில் செம்பை ஒன்றிய செயலாளர்கள் எம்.அப்துல் மாலிக், பி.எம்.அன்பழகன், நாகை வடக்கு மாவட்ட திமுக துணை செயலாளர் ஞானவேலன், மாவட்ட பொருளாளர் ஜி.என்.ரவி உட்பட திமுக பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டு பேரூராட்சி வார்டு உறுப்பினர்களை வாழ்த்தினர்.

பட விளக்கம்: தரங்கம்பாடி பேரூராட்சியில் வெற்றி பெற்ற வார்டு உறுப்பினர்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் கமலக்கண்ணன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தபோது.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )