தலைப்பு செய்திகள்
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் பேரூராட்சி பஞ்சாயத்து தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் இன்று பதவி ஏற்றுக்கொண்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் பேரூராட்சி பஞ்சாயத்து தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் இன்று பதவி ஏற்றுக்கொண்டனர்-பின்னர் தங்களுக்கு சீட் வழங்கிய தலைவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்,இதில் டாக்டர். சுரேஷ்குமார் தலைமையில் திமுக கூட்டணி கவுன்சிலர்கள் பங்கேற்பு-வார்டு பகுதி பிரச்சனைகளுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டாக உறுதி.
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் பேரூராட்சி பஞ்சாயத்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்த நிலையில் அதில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர் இந்நிலையில் பெரும்பான்மை இடங்களை கைப்பற்றிய திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இன்று பதவி ஏற்பு முடிந்த பின்பு திமுக அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தினர்,இதில் தங்களை வெற்றிபெறச் செய்த வார்டு மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர் மேலும் தங்களை எந்த நேரத்திலும் வார்டு பிரச்சனைகளுக்கு பொதுமக்கள் அணுகலாம் வார்டு பகுதிகளில் உள்ள அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தருவோம் மேலும் சாலை வசதிகள், குடிநீர் வசதிகள் போன்ற பிரச்சினைகள் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தனர், அதைத் தொடர்ந்து தங்களுக்கு சீட் வழங்கிய ஒன்றிய, மாவட்ட தலைமைக்கு நன்றி தெரிவித்தும் வெற்றியை திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு சமர்ப்பிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.இதில் டாக்டர். சுரேஷ்குமார் தலைமையில் 8வது வார்டு உறுப்பினர்.கதிரேசன்,2 வது வார்டு உறுப்பினர்.வசந்தி,12வது வார்டு.சுரேஷ்,15 வது வார்டு.சுப்பிரமணி மற்றும் கழக நிர்வாகிகள் சங்கர்,ஜெகன்,சுதை சுந்தர்,தாணப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.