BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போரை நிறுத்தக்கோரும் தீர்மானம் மீது ஐ.நா.சபையில் இன்று வாக்கெடுப்பு.

ஐ.நா. பொதுச் சபையில் உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போருக்கு பெரும்பாலான நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. சில நாடுகள் மட்டுமே ஆதரவு அளித்துள்ளன.

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ளது குறித்து விவாதிக்க ஐ.நா. பொது சபையின் சிறப்பு அவசரக்கூட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது. 193 உறுப்பினர்கள் கொண்ட ஐ.நா. பொதுச் சபையின் இந்த அவசரக் கூட்டம் 3 நாட்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

முதல் நாளில் பேசிய ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், ரஷியா உடனே போரை நிறுத்த வேண்டும். இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை பாதைக்கு திரும்பவேண்டும் என்று வலியுறுத்தினார்.

பின்னர் கூட்டத்தில் உறுப்பு நாடுகளின் ஐ.நா.வுக்கான பிரதிநிதிகள் பேசினார்கள். நேற்றும் பிரதிநிதிகள் பேசி தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர். இன்று 3-வது நாளாக ஐ.நா. சபையின் அவசரக் கூட்டம் நடைபெறுகிறது.

இந்திய நேரப்படி இன்று இரவு தொடங்கும் கூட்டத்தில் இறுதியாக பெலாரஸ் உள்பட 10 நாடுகளின் பிரதிநிதிகள் பேச உள்ளனர்.

120 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் பேசிய பிறகு, போரை நிறுத்தக் கோரும் தீர்மானத்தின் மீது இன்று வாக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டு இருக்கிறது. நேற்று நடந்த கூட்டத்தில் மாலைக்குள் பொதுச்சபையின் பாதி உறுப்பினர்கள் வாக்கெடுப்புக்கு முன்னதாக ஒரு வரைவு தீர்மானத்தில் கையெழுத்திட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் உக்ரைனுக்கு எதிரான போர் வருத்தம் அளிப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இன்று உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் பேசிய பிறகு தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்படு கிறது. இதில் 3-ல் 2 பங்கு ஆதரவு தேவை.

ஐ.நா. பொதுச் சபையில் உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போருக்கு பெரும்பாலான நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. சில நாடுகள் மட்டுமே ஆதரவு அளித்துள்ளன. ஐ.நா. பொதுச் சபையின் தீர்மானம் சட்டப் பூர்வமாக பிணைக்கப்பட வில்லை என்றாலும், அவை சர்வதேச கருத்தை பிரதிபலிப்பதில் செல்வாக்கை பெற்றுள்ளது அவை அரசியல் முக்கியத்துவத்தை பெற்றுள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.நா. பொதுச்சபையில் எந்த நாட்டுக்கும் வீட்டோ அதிகாரம் கிடையாது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தை ரஷியா வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி முறியடித்து இருந்தது.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )