BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

சோபியா வழக்கில் மனித உரிமை மீறல். தமிழக அரசுக்கு பறந்த அதிரடி உத்தரவு.

சோபியா வழக்கில் மனித உரிமை மீறல்.. தமிழக அரசுக்கு பறந்த அதிரடி உத்தரவு  விசாரணை என்ற பெயரில் புதுக்கோட்டை காவல் நிலையத்தில் பல மணிநேரம் சோபியாவை காக்க வைத்துள்ளனர்.

தூத்துக்குடிக்கு விமானத்தில் வந்த போது பாரதிய ஜனதா மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் அவரது கட்சி குறித்து அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட சோபியாவழக்கில் மனித உரிமை மீறல் நடந்துள்ளதாக மாநில மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது

விசாரணை என்ற பெயரில் புதுக்கோட்டை காவல் நிலையத்தில் பல மணிநேரம் சோபியாவை காக்க வைத்துள்ளனர். மாநில மனித உரிமை ஆணைய நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவில் சோபியாவுக்கு இரண்டு லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

அகில் எதிர் மனுதாரராக குற்றம் சாட்டப்பட்ட புதுக்கோட்டை காவல் ஆய்வாளர் திருமலை இடம் இருந்து 50 ஆயிரம் ரூபாயையும் மற்ற காவல் துறையை சேர்ந்த 6 நபர்கள் இடம் தலா 25 ஆயிரம் பிடித்தம் செய்யப்பட வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. சோபியாவிற்கான இழப்பீடு ஒரு மாத காலத்திற்குள் வழங்கப்பட வேண்டுமெனவும் தனது உத்தரவில் நீதிபதி ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )