தலைப்பு செய்திகள்
மு.க.அழகிரி வீட்டுக்கு பறந்த போன் கால். அஞ்சாநெஞ்சனின் ஆதவாளர் வைத்த திடீர் ட்விஸ்ட்.
எனது ஆதரவாளர்களையும் கட்சியில் இணைத்துக் கொண்டு என்னிடம் இருந்தவர்களை எல்லாம் அழைத்துக் கொண்டு முதுகில் குத்தி விட்டீர்களே.
எனது ஆதரவாளர்களையும் கட்சியில் இணைத்துக் கொண்டு என்னிடம் இருந்தவர்களை எல்லாம் அழைத்துக் கொண்டு முதுகில் குத்தி விட்டீர்களே..!
தேர்தல் அரசியலில் அண்ணாவின் சிந்தாந்தத்தை கடைபிடிப்பவர் கருணாநிதி. மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கைக்கும் மனமுண்டு என்பது கருணாநிதிக்கு தெரியாத கம்பசூத்திரமா என்ன? அப்படிப்பட்ட கருணாநிதி தன் மகனை குடும்பத்திலிருந்தும், அரசியலில் இருந்தும் தான் ஒதுக்கி வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டத்து அவரது மரணத்துக்குப்பிற்கும் ஒதுக்கி வைக்கப்பட்டிடுப்பருது தான் அந்தோ பரிதாபம்.
அஞ்சாநெஞ்சனின் அரசியல் அட்ராசிட்டிகள் எப்போதும் முரட்டடுத்தனமான ரகம். தென்மண்டலத் தளபதியாக, பட்டம் சூட்டப்படாத முதல்வராக வலம் வந்தார் அஞ்சாநெஞ்சன். அரசனுக்கு பத்துன்னா, அடிப்பொடிகளுக்கு என்கிறரேஞ்சில் அவரது ஆதரவாளர்கள் எனச் சொல்லிக்கொண்டு அல்லு சில்லுகல் கூட அதிகார மையத்தை ஆட்டி வைத்தனர். தமிழக அரசியலில் திருமங்களம் இடைத்தேர்தல் ஃபார்முலாவை கொண்டு வந்தது அண்ணன் அழகிரி தான் என முக்காலத்துக்கும் அரசியல் வரலாறு காலரை தூக்கிக் கொண்டு நிற்கும்.
பலமுறை மு.க.அழகிரி திமுகவில் இருந்து நீக்கப்பட்டாலும், கருணாநிதியில் கண்கள் பணிக்க, இதயம் இனிக்க திமுகவில் இணந்து விடுவார். ஆனால் 2014ம் ஆண்டுக்கு பிறகு கருணாநிதியும், அவரது குடும்பத்தாரும் எத்தனையோ முறை முயன்றும் அழகிரியை அரவணைக்கவில்லை அவரது குடும்பம். கருணாநிதி மரணத்துக்கு முன் தான் திமுக இணைந்து விடவேண்டும் எனப்போராடினார் மு.க.அழகிரி. அடுத்து போராடிப்பார்த்தார். தூது விட்டார், மிரட்டல் விடுத்தார். தனிக்கட்சி என்றார், மாற்றுக்கட்சி என்று கொளுத்திப்போட்டார். ஒரு கட்டத்தில் தனக்கு இல்லை என்றாலும் தன் மகனுக்காவது வாய்ப்பு கேட்டார்.
ஆனாலும் மு.க.ஸ்டாலின் துரும்பைக்கூட தூக்கிப்போடவில்லை. மாற்றுக்கட்சியில் இருது வருபவர்களுக்கெல்லாம் சீட் கொடுத்து அமைச்சராக்கி அழகு பார்க்கும் ஸ்டாலின், சொந்த அண்ணனை சேர்த்துக் கொள்ளக்கூடாதா? அவரும் கருணாநியின் மகன் தானே அவருக்கு உரிமை இல்லையா? என அறிவாலாயத்துள் இருந்தே குரல்கள் ஒலிக்கத்தொடங்கின. ஆனாலும் மசியவில்லை மு.க.ஸ்டாலின்.
இதற்கு மேலும் செய்ய என்ன இருக்கிறது? எனத்திகைத்துப்போன அழகிரி, முரட்டுக்காரியங்களை எல்லாம் மூட்டை கட்டி வைத்து விட்டு பெட்டிப்பாம்பாய் வீட்டிற்குள் முடங்கிப்போனார். அடுத்து ஆட்சி மாறின. அண்ணன் தம்பி விவகாரத்தில் காட்சிகளும் மாறத்தொடங்கின. முதல்வரானதற்கு சித்தப்பாவுக்கு வாழ்த்துச் சொன்னார் அழகிரி மகன். அவர் என்னென்றும் எங்கள் பாசக்கார பெரியப்பா அன்பை பொழிந்தார் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி.
முதல்வராக மு.க. ஸ்டாலின் பதவியேற்ற நிகழ்ச்சியில் மு.க.அழகிரியின் குடும்பத்தினர் பங்கேற்று பாசமலர் பொழிந்தனர். திமுகவின் 200 நாள் விடியலாட்சியில் அக்கட்சியினரை பெரிதும் பெரிதும் மனக்குறையோடு எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கும் ஒரே சம்பவம் மு.க.அழகிரி- ஸ்டாலின் சந்திப்புதான் என அறிவாலயத்தில் நாலாபுறமும் எதிரொலிக்கிறது பேச்சுக்கள். இதனை நோட்போட்டு வைத்திருந்ததாலோ என்னவோ, அண்ணனை சந்திக்கிறார் மு.க.ஸ்டாலின் என கிடைத்த கேப்பில் எல்லாம் வெத்து வேட்டுக்களை புகைத்துக்கொடிருந்தனர் ரத்தத்தின் ரத்தங்கள்.
அப்படித்தான் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாளான நேற்றும் நேரில் வந்து மு.க.ஸ்டாலினை பாராட்ட அழகிரி சென்னை வருவதாக செய்திகள் வட்டமடித்தன. ஆனால் அது நடக்கவில்லை. கண்கள் பணிந்தும், இதயம் இனித்தும் ஏன் இத்தனை நாட்கள் வரை அண்ணன் தம்பிகளின் சந்திப்பு நடக்காகமல் இருப்பது ஏன் என்கிற பின்னணியை ரத்தத்தின் ரத்தங்கள் பகிர்ந்து கொண்டனர்.