தலைப்பு செய்திகள்
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக ஆய்வு மாணவர் ஆய்வில் கிடைத்த அரிய தாள் சுவடி.
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அருட்பிரகாச வள்ளலார் படைப்புகள் சுவடிகளும் பதிப்புகளும் என்ற தலைப்பில் முழு நேர முனைவர் பட்ட ஆய்வை அரிய கையெழுத்துச் சுவடி துறையில் செய்துவரும் ஆய்வாளர் கௌசல்யா தனது கள ஆய்வில் அரிய கையெழுத்துச் சுவடியை திரட்டி உரிய வழியாக அரிய கையெழுத்துச் சுவடி துறையில் வழங்கினார்.
இச்சுவடி தொகுப்பில் இலக்கண வழக்கப்பாடு அறிவுறுத்தும் பத்திரிக்கை, அனுஷ்டான விதி, பூவரங்க முதலியார் தொகுத்த கவிகள், குலோத்துங்க சோழன் கோவை (ஒட்டக்கூத்தர்) நியாய சாஸ்திரம் 16 பதார்த்தங்கள் நிரூபணச் சுருக்கம், குவலயாநத்தம், அருணகிரி புராணம், திருக்கழுக்குன்ற கோவை (சோமசுந்தரம் பிள்ளை) உலகம்மை கலித்துறை அந்தாதி (நமச்சிவாயப் புலவர்) மாயா பிரபாபம், மனக்கொன்றை அந்தாதி, செளந்தர நவமணிமாலை.
மகழ் மாக் கலம்பகம் முதலியன உள்ளன, இச்சுவடியை தமிழ் பல்கலைக்கழகத்திற்கு வழங்கிய முனைவர் பாண்டுரங்கன் அவர்கள் பெயரில் இச்சுவடி அரிய கையெழுத்துச் சுவடி துறை ஆவண பதிவேட்டில் பதியப்பட்டது, இந்த ஆய்வை மேற்கொண்ட ஆய்வாளர் கௌசல்யாவை தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் திருவள்ளுவன் மற்றும் சுவடி துறை தலைவர் கண்ணன் ஆகியோர் பாராட்டினர்.
இந்த அரிய தாள் சுவடி சுமார் 100 (1882) ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கலாம் என தெரிய வருகிறது.