BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

திமுக வேட்பாளர் வாக்காளர்களை கவரும் வகையில் வீடுகள் தோறும் வெற்றிலை பாக்கு வைத்து அழைத்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு.

தமிழகம் முழுவதும் வரும் 19ஆம் தேதி நகர்ப்புற ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி திமுக அதிமுக உட்பட அரசியல் கட்சியினர் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் .இதில் ஒரு சில வேட்பாளர்கள் வாக்காளர்களை கவரும் வகையில் வித்தியாசமான முறையில் பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகின்றனர். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி சிறப்பு நிலை பேரூராட்சிக்கு உட்பட்ட ஒன்பதாவது வார்டு பகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சுப்பிரமணி தனது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று ஒவ்வொரு வீட்டில் உள்ள வாக்காளர்களையும் வெற்றிலை பாக்கு மற்றும் குங்குமம் கொடுத்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கும் நிகழ்வு நடைபெற்றது.அப்போது இப்பகுதி வாக்காளர்கள் கடந்த பத்து வருடமாக தங்களது பகுதியில் அடிப்படை வசதிகளான சாலை வசதி கழிவுநீர் வாய்க்கால் ,குடிநீர் போன்றவைகள் இல்லாமல் உள்ளது சாலை குண்டும் குழியுமாக உள்ளது என கூறினர் மேலும் இப்பகுதியில் அதிக அளவில் நெசவாளர்கள் உள்ளனர் இந்தியாவிலேயே சுங்குடி சேலை என்று சொன்னவுடன் சின்னாளபட்டி தான் ஞாபகத்துக்கு வரும் தற்போது இப்பகுதியிலுள்ள நெசவாளர்கள் மிகவும் பின்தங்கி வறுமைக்கோட்டிற்கு கீழ் சென்றுள்ளனர். முதியவர்களுக்கு முதியோர் பென்சன் இல்லை அதேபோல் நியாயவிலைக் கடைகளில் முதியவர்கள் அரிசி வழங்குவது கிடையாது அதிக அளவு நெசவாளர்கள் வாடகை வீட்டில் உள்ளனர்.

 

அவர்களுக்கு இலவச பட்டா மற்றும் வீடு தமிழக அரசு கட்டித்தர வேண்டும். நெசவாளர்கள் அதிகளவில் உடல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர் ஆகவே அவர்களுக்கு மருத்துவ காப்பீடு மருத்துவ வசதி தமிழக அரசு செய்து தர வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வாக்காளர்கள் தெரிவித்தனர்.அதற்கு வேட்பாளர் கூறுகையில்…. பொதுமக்களிடம் தங்களது கோரிக்கைகளை அனைத்தும் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள இப்பகுதியை சேர்ந்த கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ பெரியசாமி அவர்களிடம் தெரிவித்து தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற பாடுபடுவேன் .அதே போல் நானும் இதே பகுதியில் உள்ள தார் சாலைகள் எவ்வாறு உள்ளது அடிப்படை வசதிகள் தேவை என்ன என்பது எனக்குத் தெரியும் ஆகவே பொதுமக்கள் கோரிக்கைகளை கண்டிப்பாக நிறைவேற்றுவேன்.எனக்கூறி பொதுமக்கள் அனைவரும் கண்டிப்பாக வரும் 19ஆம் தேதி வாக்குச்சாவடிக்கு வந்து வாக்கு பதிவு செய்ய வேண்டும் 100 சதவீத வாக்குப்பதிவு செய்ய வேண்டும் மேலும் தற்போது உள்ள சூழ்நிலையில் திமுகவினர் வெற்றிபெற்றால் கண்டிப்பாக சின்னாளபட்டி பகுதி முழுவதும் உள்ள அனைத்து அடிப்படை வசதிகள் மற்றும் பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்கு எங்களது கட்சியினர் பாடுபடுவார்கள் என்று கூறி வீடு வீடாக சென்று வெற்றிலை பாக்கு மற்றும் குங்குமம் கொடுத்து வாக்கு சேகரித்தார் தமிழகத்தில் வெற்றிலை பாக்கு வைப்பது என்பது ஒவ்வொரு வீடுகளிலும் சுபநிகழ்ச்சிகள் அழைக்கும் வழக்கம் உள்ளது தற்போது எங்களுக்கு வாக்களித்தால் உங்கள் வீடுகளில் சுபநிகழ்ச்சி என்பது இப்பகுதி தேவைகள் அனைத்தும் நிவர்த்தி செய்யப்படும் என்பதற்காகவே வெற்றிலை பாக்கு வைத்ததாகவும் கூறினார்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )