தலைப்பு செய்திகள்
மயான கொள்ளை திருவிழாவில் அடுத்தடுத்து பெண்களிடம் 10 சவரன் தங்க செயின் பறிப்பு.
ஆம்பூரில் இரண்டாவது நாளாக தொடரும் செயின் பறிப்பு. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தேவலாபுரம் பாலாற்றில் இன்று நடைபெற்ற மயாணகொள்ளை திருவிழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்ற நிலையில் தேவலாபுரம் பகுதியை சேர்ந்த சவுந்தரவள்ளி என்ற மூதாட்டி என்பவர் தனது குடும்பததினருடன் சுவாமி தரிசனம் செய்து கொண்டு இருந்தபோது மூதாட்டியின் கழுத்தில் இருந்த 2 சவரன் தங்க சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து சென்றுள்ளனர். இதே போல் மோட்டுகொல்லை பகுதியை சேர்ந்த லாவண்யா என்ற பெண் கழுத்தில் அணிந்திருந்த 3 சவரன் தங்க சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து சென்றுள்ளனர் இது குறித்து சவுந்தரவல்லி மற்றும் லாவண்யா அளித்த புகாரின் அடிப்படையில் ஆம்பூர் நகர காவல் துறையினர் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதே போல் நேற்று மஹா சிவராத்திரி விழாவில் பழமைவாய்ந்த நாகநாத சுவாமி கோவிலில் 3 பெண்களிடம் 6 சவரன் தங்க சங்கிலிகளை மர்ம நபர்கள் பறித்து சென்றுள்ளனர். ஆம்பூரில் கோவில் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தொடர்ந்து இரண்டு நாட்களாக நடைபெற்று வரும் செயின் பறிப்பு சம்பவங்களால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.