தலைப்பு செய்திகள்
திருச்சி மாநகராட்சிக்கு நாளை தி.மு.கவுக்கு மேயர் பதவி – துணை மேயர், கோட்ட தலைவர் பதவி யாருக்கு.
திருச்சி மாநகராட்சிக்கு நாளை தி.மு.கவுக்கு மேயர் பதவி – துணை மேயர், கோட்ட தலைவர் பதவி யாருக்கு – மல்லுக்கட்டும் காங்கிரஸ் திமுகவினர் – சீனியர்களை ஓரம்கட்டி புதுமுகத்தை துணை மேயராக அறிவிப்பதாக பரபரப்பு தகவலால் திமுகவினர் குமுறல்
தமிழகத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 21மாநகராட்சிகளையும், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளையும் கைப்பற்றி மீண்டும்
தமிழகம் திமுக கோட்டையாக மாறி உள்ளது.
சட்டமன்ற தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் உள்ள 9சட்டமன்ற தொகுதியையும், 14 ஊராட்சிகளை திமுக கைப்பற்றிய நிலையில் தற்போது நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருச்சி மாநகராட்சியையும், 4நகராட்சியையும், 14பேரூராட்சிகளையும் கைப்பற்றி திருச்சியை தனது கோட்டையாக மாற்றியுள்ளது தி.மு.க.
அ.தி.மு.க.வினர் இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டனர். ஆனால் மாநகராட்சியில்
3இடங்களை மட்டுமே வெற்றி பெற்று படுதோல்வி அடைந்தனர்.
திருச்சி மாநகராட்சியில் போட்டியிட்ட 51இடத்தில் திமுக தனித்து 49இடங்களில் வெற்றி பெற்று மாநகராட்சியை கைப்பற்றியது.
திமுக கூட்டணியில் காங்கிரஸிற்கு ஒதுக்கபட்ட 5 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.
தி.மு.க.வை பொறுத்த வரை மேயர் வேட்பாளர் யார்? என்பது உறுதியாகிவிட்டதாக திமுக வட்டாரங்கள் தெரிவித்தனர்.
நேற்று வெற்றி பெற்ற திமுகவினர் அனைவரும் பதவி ஏற்ற நிலையில் துணை மேயர் பதவிக்கு திமுகவில் கடும் போட்டி எழுந்துள்ள நிலையில் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியினர் துணை மேயர் பதவியை மாநகராட்சி துணை மேயர் பதவியை ஏற்கனவே மேயராக பணியாற்றிய சுஜாதாவுக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை வலியுறுத்தி வருகிறார்கள்.
திருச்சி மாநகராட்சி தரம் உயர்த்தப்பட்ட பின்னர் தொடர்ந்து மேயராக காங்கிரஸ் கட்சியினர் இருந்து வந்தனர். தற்பொழுது மேயர் பதவி அவர்ளுக்கு
இல்லை என்று உறுதியாகிவிட்ட நிலையில் துணை மேயர் பதவியையாவது வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
துணை மேயர் பதவிக்கு காங்கிரஸார் அமைச்சர் நேருவுக்கு நெருக்கடி கொடுத்து வரும் நிலையில் திமுகவை சேர்ந்த விஜயாஜெயராஜ், கிராப்பட்டி முத்துச்செல்வம் ஆகியோரும் தங்களுக்கு துணை மேயர் பதவி வழங்க வேண்டுமென நெருக்கடி கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.
இதனிடையே அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் தீவிர ஆதரவாளரான மதிவாணனுக்கு துணை மேயர் பதவிக்கு பரிந்துரைக்கபட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் 33வது வார்டில் முதல்முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற திவ்யா என்பவரை துணை மேயராக அறிவிக்க உள்ளதாகவும் ஒரு பரபரப்பு செய்தி திமுகவினர் மத்தியில் கசிய விடப்படுகிறது.
சீனியர்களை ஓரம் கட்டிவிட்டு தற்போது அரசியலுக்கு வந்த அரசியலே தெரியாத ஒரு புதுமுகத்தை துணை மேயராக அறிவிப்பது பொருத்தமற்றது என திமுகவினர் மனக்குமுறலில் இருந்து வருகின்றனர்.
இதனிடையே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் திருச்சி துணை மேயர் பதவியை ஸ்டாலினிடம் கேட்டு இருப்பதாகவும் .தெரிவித்துள்ளார் மேலும் திருச்சி ஸ்ரீரங்கம் கோட்டத் தலைவர் பதவியை விடுதலை சிறுத்தைக்கு வழங்க வேண்டும் எனவும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
தற்போது துணை மேயர் பதவி நெருக்கடி நீடித்து வரும் நிலையில் அடுத்ததாக அரியமங்கலம், பொன்மலை, அபிஷேகபுரம், ஸ்ரீரங்கம் ஆகிய
4கோட்டத்திற்கான கோட்டத் தலைவர் பதவிக்கு திமுகவினர் இடையே கடும் போட்டி ஏற்பட்டு வருகிறது.
இதேபோல் திருச்சி மாவட்டத்தில் உள்ள 5நகராட்சி மற்றும் 14பேரூராட்சிகளின் தலைவர், துணைத்தலைவர் பதவிக்கான போட்டியும் நடைபெற்று வருகிறது.