தலைப்பு செய்திகள்
கிருஷ்ணகிரியில் ஓபிஎஸ், ஈபிஎஸ் பதவி விலக வலியுறுத்தி ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு.
கிருஷ்ணகிரி மாவட்டம் புதிய பேருந்து நிலையம் எதிரே ஓபிஎஸ், ஈபிஎஸ் பதவி விலக வலியுறுத்தி காவேரிப்பட்டினம் ஒன்றியம் சார்பில் வெற்றிவேல் என்பவர் பெயரில் போஸ்டர் ஒட்டப்பட்டு உள்ளது.
அந்த போஸ்டரில் எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டு, ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்டு சசிகலாவால் பாதுகாக்கபட்ட அதிமுகவை சந்தர்ப்ப சூழ்நிலையால் கைப்பற்றி தொடர் தோல்விக்கு காரணமான ஓ.பண்ணீர்செலவம், மற்றும் எடப்பாடி பழனிச்சாமி பதவி விலக வேண்டும்.
இவர்கள் தலைமையில் நடைபெற்ற நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல் ஊரக உள்ளாட்சி, நகர்புற உள்ளாட்சி தேர்தலில் படு தோல்வி கண்டது புதுவையில் கட்சி அடியோடு காணாமல் போய்விட்டது என ஒட்டப்பட்டு உள்ளது. மேலும் தமிழகத்திலும் கட்சியை காலி செய்ய சதி நடைபெறுவதாகவும் 50 லட்சம் தொண்டர்கள் மாற்று கட்சிக்கு சென்றுவிட்டனர்கள், மீதம் உள்ள 50 லட்சம் பேரும் நடுநிலையோடு இருப்பதாகவும் ஓட்டப்பட்டு உள்ளது.
சசிகலா கட்சியின் பொது செயலாளராக பொறுப்பேற்று ராணுவ கட்டுப்பாட்டுடன் கட்சியை வழி நடத்த வேண்டும் என போஸ்டரில் அச்சிடப்பட்டு உள்ளது. இந்த போஸ்டரால் கிருஷ்ணகிரியில் அதிமுகவினர் இடையே பரபரப்பு நிலவி வருகிறது.