தலைப்பு செய்திகள்
ஜாமீன் பெற்றார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் – திருச்சியில் கையெழுத்திட நீதிபதி உத்தரவு.
கடந்த 19ம் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில்
சென்னையிலுள்ள ஒரு வார்டில் திமுகவைச் சேர்ந்த நபர் ஒருவர் கள்ள ஓட்டு போடுவதாக கூறியதை தொடர்ந்து அங்கு இருந்த அதிமுகவினர் மற்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அந்த நபரை சட்டையைக் கழட்டச் சொல்லி கைகளை கட்டி அடித்து திருடனைப் போல அழைத்துச் சென்றதாக கூறி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது புகார் கொடுக்கப்பட்டது.
புகாரை தொடர்ந்து அவர் வீட்டில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில்
மனு தாக்கல் செய்தனர்.
தொடர்ந்து இன்று சென்னை உயர் நீதிமன்றம் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது.
அதில் திருச்சியில் தங்கியிருந்து அங்குள்ள கண்டோமெண்ட் காவல் நிலையத்தில் 2 வாரங்களுக்கு கையெழுத்திட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.