BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

உறக்கத்திற்கு உத்தரவாதம். இந்தியன் ரயில்வே அறிவிப்பு.

பாதுகாப்பு மற்றும் செலவு குறைவு போன்ற காரணங்களால், குறுகிய தொலைவாக இருந்தாலும் சரி அல்லது நீண்ட தொலைவாக இருந்தாலும் சரி எந்த நேரத்தில் எங்கு செல்ல வேண்டுமானாலும் மக்கள் பிரதானமாக ரயில் பயணத்தையே தேர்வு செய்கின்றனர்.

அதே நேரத்தில், ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்தியன் ரயில்வே ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு சில விதிமுறைகள் அவ்வப்போது வெளியிடுகிறது.

இந்நிலையில், பயணிகளிடம் இருந்து பெற்ற புகார்களின் அடிப்படையில் பயணிகள் தூங்குவதற்கான விதிகளில் மாற்றம் செய்து, புதிய விதிமுறைகளை ரயில்வே வெளியிட்டுள்ளது.

அதன்படி, உங்கள் இருக்கையில் இருந்தவாறு மற்ற பயணிகளை தொந்தரவு செய்யும் வகையில் சத்தமாக பேசக்கூடாது. மேலும், செல்போன்களில் அதிக சவுண்ட் வைத்து பாட்டு கேட்கவும், படம் பார்க்கவும் கூடாது.

உங்கள் நடவடிக்கை சக பயணிகளுக்கு தொந்தரவாக இருக்கும் பட்சத்தில், அவர்கள் புகார் தெரிவிக்க முடியும். சக பயணிகளின் உறக்கத்துக்கு உத்தரவாதம் கொடுக்கும் வகையில் புதிய விதிமுறைகள் ரயில்வே வெளியிட்டுள்ளது.

உடனடியாக அமலுக்கு வந்துள்ள இந்த விதிமுறைகளின்படி, குழுவாக அமர்ந்து பேசுவது, கேலி பேசி சத்தமாக சிரிப்பது ஆகியவை குறித்தும் புகார் தெரிவிக்கலாம்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )