தலைப்பு செய்திகள்
கெர்சனை கைப்பற்றிய ரஷ்யா. உக்ரைன் அறிவிப்பு!!
உக்ரைனின் தெற்கு பகுதியான கெர்சன் நகரை ரஷ்யா கைப்பற்றியதாக உக்ரைன் அறிவித்துள்ளது.
ரஷ்யா – உக்ரைனுக்கு இடையிலான போர் 8ஆவது நாளாக நடைபெற்று வருகிறது. உக்ரைனின் கார்கிவ் நகரில் ரஷ்யா ஆயுதம் ஏந்திய வாகனங்கள் மற்றும் பீரங்கிகள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது.
உக்ரைனில் பல்வேறு நகரங்கள் உருக்குலைந்து வருவதோடு உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. இதனிடையே, போரை முடிவுக்குக் கொண்டு வர, கடந்த திங்களன்று பெலாரஸில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நேற்று நடைபெறுமென அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் உக்ரைன் தரப்பில் யாரும் வராததால் பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டதாக ரஷ்யா தரப்பு தெரிவித்துள்ளது. இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை இன்று நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, உக்ரைனின் தெற்கு நகரமான கெர்சனை ரஷ்ய படைகள் கைப்பற்றியதாக இங்கிலாந்து ராணுவ அமைச்சகம் நேற்று கூறியது. அந்த நகரின் மையப்பகுதிக்குள் ரஷ்ய படைகள் நகர்ந்தாலும் குறிப்பிட்ட அளவே பலன் அடைந்துள்ளன.
நகரின் பெரும்பகுதியை பிடித்து விட்டதாக ரஷ்ய ராணுவ அமைச்சகமும் கூறியது. ஆனால் இந்த தகவலை கெர்சன் மேயர் மறுத்தார். தங்கள் நகரம் உக்ரைன் படையினரின் கட்டுப்பாட்டில் இருப்பதாக அவர் நேற்று தெரிவித்தார். இந்த நிலையில், கெர்சன் நகர் முழுவதுமாக தற்போது தற்போது ரஷ்யாவின் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது. இதனை உக்ரைனும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.