BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

திருப்பூர் மாவட்டம் உடுமலை சுற்று வட்டார பகுதிகளில்கோடைகாலம் தொடங்கியதால் மண்பானைகள் உற்பத்தி அதிகரித்துள்ளது.

மண் பானைகளுக்கு இருந்த வரவேற்பு கிராமங்களிலும் மங்கிப்போய், ஆண்டுகள் பல ஓடிவிட்டன… ஆனாலும் இன்றைய சூழலில் மண் பானைகளுக்கு கோடை காலத்தில் மட்டும் தான் சற்று வரவேற்பு உள்ளது பொது மக்களை கவரும் வகையில் பல வகையான மண் பாண்ட பொருள்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இது பொது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

கோடைகாலம் தொடங்கிவிட்டாலே வெயிலின் உக்கிரம் அதிகமாக இருக்கும். உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள கடந்த காலங்களில் முன்னோர்கள் மண்பானை தண்ணீரை பருகி வந்தனர். நாகரீக வளர்ச்சியால் காலப்போக்கில் மண்பாண்டங்கள் மறைந்து தற்போது குளிர்சாதன பெட்டியில் வைத்த நீரை அருந்துகின்றனர். கால சுழற்சியில் மண்பாண்டங்களின் பயனை உணர்ந்த மக்கள் தற்போது கோடைகாலத்தில் மண் பானைகளை வாங்கி வருகின்றார்.

வெயில் காலத்தில் உடலில் ஏற்படும் நீர் இழப்பைச் சமாளிக்க அதிக அளவு தண்ணீர் அருந்த வேண்டும். அதே சமயம், அந்தத் தண்ணீர் சுத்தமானதாகவும் இருக்க வேண்டும் என்பதால் மண் பானையை வாங்க வந்துள்ளதாக கூறுகின்றனர் இதனை வாங்க வருவோர்.

கோடை காலம் துவங்கியதால், பானை விற்பனை சூடுபிடித்துள்ளது. மண் பானையில் தண்ணீரை வைத்து குடிப்பது ஆரோக்கியமானது  என்றும் கோடை காலத்தை சமாளிக்கும் வகையில் பானைகள் மட்டும் இல்லாமல் புதிய வகையான மண்பாண்ட பொருட்களை தயார்படுத்தி விற்பனைக்கு வைத்துள்ளனர். அதில் குழந்தைகள் விரும்பும் வகையல் சிறிய வகை பானைகள் ,டம்ளர்கள் ,வாட்டர் கேன்கள், தண்ணீர் ஊற்றி வைக்கும் ஜார்கள், குழாய் பதித்த பானைகளை அதிகளவில் விற்பனைக்கு வைத்துள்ளனர். இது பொது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளதாகவும் கூறுகின்றனர் மண் பாண்ட தொழிலாளிகள்.

மின்சாரம் இல்லாமலே உடலுக் இதமான குளிர்ந்த நீரை நமக்கு உருவாக்கித் தருகிறது மண் பானை.. கோடை வெயிலைச் சமாளிக்க எத்தனையோ செயற்கை முறைகளை நாம் பயன்படுத்தினாலும் இயற்கை முறையில் உருவான இந்த மண் பானைகளுக்கு தனி மவுசு தான்.

 

நாங்கள் தலைமுறை தலைமுறையாக மண்பாண்டம் செய்து வருகிறோம் தற்போது கோடை காலத்திற்கு ஏற்ற வகையில் குடிநீர் பானைகள் வாட்டர் கேன் தயிர் சட்டி வாட்டர் ஜக் போன்ற பல்வேறு மண்பாண்டங்கள் தயார் செய்து வைத்து இருக்கிறோம் மக்கள் இந்த கோடைகாலத்தில் விரும்பி வாங்கிச் செல்கின்றனர் என மண் பாண்ட தொழிலாளி பஞ்சலிங்கம் தெரிவித்த தார்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )