தலைப்பு செய்திகள்
திருச்சி மாநகர துணை மேயராக புதுமுகம் அறிவிப்பு திமுக தொண்டர்கள் குமறல்.
திருச்சி மாநகர துணை மேயராக புதுமுகம் அறிவிப்பு திமுக தொண்டர்கள் குமறல்.
கடந்த 19ஆம் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக தனித்துப் போட்டியிட்டு நாற்பத்தி ஒன்பது இடங்களை கைப்பற்றி
திருச்சி மாநகராட்சியை திமுக கைவசம் படுத்தியது.
நேற்று இரண்டாம் தேதி வெற்றி பெற்ற அனைவரும் திருச்சி மாநகராட்சி மைய அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பதவி மாமன்ற உறுப்பினர்களாக பதவிஏற்றுக்கொண்டனர்.
நாளை நடைபெறவுள்ள மாநகராட்சி மேயர் துணை மேயர் காண போட்டா போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் மேயர், துணைமேயர் பதவிக்கான பெயர்களை இன்று திமுக தலைமை அறிவித்தது . அதன்படி திருச்சி மாநகர மேயராக மறைமுகமாக தெரிவிக்கப்பட்ட திருச்சி மாநகர
செயலாளர் அன்பழகன் மேயராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதேபோல் துணை மேயராக முதல் முறையாக போட்டியிட்டு 33வது வார்டில் வெற்றி பெற்ற திவ்யாதனக்கோடியை துணை மேயராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே துணை மேயர் பதவிக்கு திமுகவில் அமைச்சர் கே.என்.நேருவின் ஆதரவாளரான கிராப்பட்டி முத்துச்செல்வம், விஜயாஜெயராஜ் மற்றும் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி ஆதரவாளரான மதிவாணன் ஆகியோரில் ஒருவர் அறிவிக்கப்படுவார் என்று இருந்த நிலையில் திடீரென முதல் முறையாக தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற புதுமுகமான திவ்யாவை அறிவித்தது திமுக கட்சியினரிடையே பெரும் மனக்குமுறலை ஏற்படுத்தியுள்ளது. கட்சிக்காக தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்டு பாடுபட்டவர்களை தலைமை கண்டுகொள்ளவில்லை என வருத்தம் தெரிவிக்கின்றனர்.
தற்போது திருச்சி மாநகராட்சி மேயராக பதவி ஏற்க உள்ள அன்பழகன் கடந்து வந்த பாதை
1980-ம் ஆண்டு முதல் தனது கழகப் பணியாற்றி வருகிறார். 1993 முதல் 1998-ம் ஆண்டு வரை மாவட்ட கழக இளைஞரணி அமைப்பாளர் பதவி வகித்து வந்தார். இதனைத் தொடர்ந்து
1999-ம் ஆண்டு முதல் திருச்சி மாநகர செயலாளர் பதவி வகித்து வருகிறார்.
இதனிடையே கடந்த 2001 முதல் 2011-ம் ஆண்டு வரை துணை மேயர் பதவி வகித்து வந்தார்.கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற திருச்சி நாடாளுமன்ற தேர்தலில் 3 லட்சத்து 8 ஆயிரத்து வாக்குகள் பெற்று இரண்டாமிடம்.
தற்போது 2022ம் ஆண்டு நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 27வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்று
மாநகராட்சி மேயராக நாளை பதவியேற்கவுள்ளார்.