BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

உக்ரைனில் தங்கிப்படிக்கும் காரைக்கால் மாணவ மாணவிகளின் பெற்றோர்களை பாண்டிச்சேரி மாநில சபாநாயகர் சந்தித்து ஆறுதல் .

பாண்டிச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்திற்கு வருகை புரிந்த மாண்புமிகு சபாநாயகர் ஏம்பலம் செல்வம் உக்ரேனில் தங்கிப் படிக்கும் 5 காரைக்கால் மாணவ-மாணவிகளின் வீடுகளுக்கு சென்று அவர்களின் பெற்றோர்களை சந்தித்து ஆறுதல் கூறி பேசினார்.

அவர் கூறும்போது, மாண்புமிகு இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி இவ்விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் இன்னும் இரண்டு மூன்று நாட்களில் அவர்கள் பத்திரமாக மீட்க படுவார்கள் என்றும் வெளியுறவுத்துறை அமைச்சகமும் இந்தியன் அம்பாசியும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது என்றும் கூறினார்.

மேலும் மாணவர்களிடம் மாண்புமிகு சபாநாயகர் மற்றும் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினர். இந்நிகழ்வில் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் சர்மா, முதுநிலை காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் (தெற்கு) மற்றும் உடனிருந்தனர். மேலும் சபாநாயகர் கூறுகையில் போர் பதற்றம் தணிந்து மாணவர்களின் படிப்பு தொடர மாண்புமிகு பாரதப் பிரதமர் உரிய நடவடிக்கை எடுப்பார் என்றும் இதன் செலவுகளை மத்திய அரசாங்கமே ஏற்க்கும் என மாண்புமிகு சபாநாயகர் தெரிவித்தார்.

மேலும் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் மாணவர்களின் பெற்றோர்கள் ஏதாவது தேவை இருப்பின் ஆட்சியரையோ அல்லது ஆட்சியர் அலுவலகத்தையோ அணுகலாம் என்றும் சபாநாயகர் கூறினார்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )