தலைப்பு செய்திகள்
வாணியம்பாடி அருகே ஊராட்சி மன்ற அலுவலகம் நுழைவாயில் பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.
வாணியம்பாடி அருகே ஊராட்சி மன்ற அலுவலகம் நுழைவாயில் பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஒன்றியத்திற்குட்பட்ட ஜாப்ராபாத் ஊராட்சியில் மொத்தம் 12 வார்டுகள் உள்ளன ஊராட்சி மன்ற தலைவராக அமீர்பாஷா உள்ளார் கடந்த 10 நாட்களாக ஊராட்சி சார்பில் கழிவு நீர் கால்வாய்கள் தூர் வாராததாலும், குப்பை கழிவுகளை வார்டு பகுதிகளில் தேங்கிக் கிடப்பதால் தூர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் ஊராட்சி மன்றத்தில் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகம் நுழைவாயில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் 12 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்ட அரசு சார்பில் இடத்தை ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்து ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பாக தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கிராமிய போலீஸார் தர்ணாவில் ஈடுபட்டு இருந்த பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை ஈடுபட்டனர் இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர் இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.