BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியங்களில் அறம் என்ற தலைப்பில் பன்னாட்டுக் கருத்தரங்கம்.

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியங்களில் அறம் என்ற தலைப்பில் பன்னாட்டுக் கருத்தரங்கம் சிறப்பாக நடைபெற்றது.

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தமிழ் பல்கலைக்கழக இலக்கியத்துறையும் திருச்சி ஜமால் முகமது கல்லூரி,பெரியார் ஈவேரா கல்லூரி,உருமு தனலட்சுமி கல்லூரி தமிழாய்வுத்துறையும் இணைந்து தமிழ் இலக்கியங்களில் அறம் என்ற தலைப்பில் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெற்றது,இரண்டு நாட்கள் நடைபெறும் இக்கருத்தரங்கில் அற இலக்கியங்களுக்கு திருக்குறளின் கொடை, தமிழர் அறக்கோட்பாடுகள் சமூக உளவியல் நோக்கு, அறம் கண்ட சீத்தலை சாத்தனாரும் அறம் எதிர்நோக்கும் பாவேந்தரும், புறநானூற்றில் அறச் சிந்தனைகள், வெண்பா மற்றும் ஆசிரியப்பா வழி அறம், கம்பனில் வாழ்வியல் அறங்கள், போர் முறைகளில் அறம், உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் அமர்வுகளாக கட்டுரையாளர்கள் சிறப்புரை ஆற்றுகின்றனர்,

இதனையடுத்து இக்கருத்தரங்கின் தொடக்கவிழா நிகழ்ச்சியில் தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் திருவள்ளுவன் கலந்து கொண்டு தலைமை உரை மற்றும் கருத்தரங்க மலரினை வெளியிட்டார், இக்கருத்தரங்கு மலரினை பாஜக மாநில பொதுச் செயலாளரும் பேராசிரியருமான ராம சீனிவாசன் பெற்று கொண்டு சிறப்புரை ஆற்றினார்,

அப்போது பேசிய அவர், அறம் என்பது எது நம்மை நீடித்து நிலைபெற செய்யுமோ, எது நமக்கு மரியாதை கொடுக்குமோ, எது சமுதாயத்தை காக்குமோ அதை தொடர்ந்து செய்வது தான் அறம் ஆகும், அதற்கான கூறுகளை கொண்டது தான் தமிழ் சமூகம் என்றும் தமிழனும் தமிழ்நாடும் இல்லையென்றால் இந்தியா முழுமை பெறாது,ஒட்டுமொத்த பாரத தேசத்திற்கும் அத்துணை நற்பண்புகளும் உருவாகுகிறது என்றால் அது தமிழ் சமுதாயத்திலிருந்து உருவாகியிருக்கும் என்று தெரிவித்தார், இவ்விழாவில் தமிழ் பல்கலைக்கழக பதிவாளர் சங்கர் கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் தேவி, பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர்கள் காமராசு அமுதா பாரி உள்ளிட்ட கல்லூரி மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )