BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

திருச்சி மேயராக பதவி ஏற்றார் அன்பழகன் – அமைச்சர்கள் வாழ்த்து.

தமிழகத்தில் நகரப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து பிப்ரவரி 22 ஆம் தேதி நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், திமுக கூட்டணியானது அதிகளவிலான இடங்களில் வெற்றி பெற்றது.

மொத்தமுள்ள 21மாநகராட்சிகளுக்கான மேயர் பதவியில் கும்பகோணம் மாநகராட்சி காங்.க்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 20 மாநகராட்சிகளுக்கான மேயர் பதவிகளை திமுக கைப்பற்றியது நேற்று திமுக தலைமையில் எந்தெந்த மாநகராட்சியில் யார் யார் யார் என பெயர்களை வெளியிட்டது. அதன்படி, தமிழகத்தில் மாநகராட்சி மேயர், துணை மேயர், நகர்மன்றத் தலைவர், பேரூராட்சித் தலைவர், துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுகத் தேர்தல் இன்று நடைபெற்றது. திருச்சி மாநகராட்சியைப் பொருத்தவரையில் திமுக மேயர் வேட்பாளராக மு.அன்பழகன் அறிவிக்கப்பட்டிருந்தார். அவரை எதிர்த்து யாரும் போட்டியிடாததால் திருச்சி மேயராக அன்பழகன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதையடுத்து அவருக்கு திருச்சி மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பதவி ஏற்ற மேயர் அன்பழகனுக்கு நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் வாழ்த்துத் தெரிவித்தனர்.

 


இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் சிவராசு, கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் இனிகோ இருதயராஜ், திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இன்று திருச்சி மாநகராட்சி மேயராக பதவி ஏற்ற
மேயர் அன்பழகன் தனது அரசியல் வாழ்க்கையில் கடந்து வந்த பாதைகள்

1980-ம் ஆண்டு முதல் தனது கழகப் பணியாற்றி வருகிறார்.
1993 முதல் 1998-ம் ஆண்டு வரை மாவட்ட கழக இளைஞரணி அமைப்பாளர் பதவி வகித்து வந்தார்.

தொடர்ந்து
1999-ம் ஆண்டு முதல் திருச்சி மாநகர செயலாளர் பதவி வகித்து வருகிறார்.

இதனிடையே கடந்த
2001 முதல் 2011-ம் ஆண்டு வரை துணை மேயராக பதவி வகித்து வந்தார்.

கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற திருச்சி நாடாளுமன்ற தேர்தலில் 3 லட்சத்து 8 ஆயிரத்து வாக்குகள் பெற்று இரண்டாமிடம் பெற்றார்.

தற்போது நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 27வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்று
மாநகராட்சி மேயராக இன்று பதவியேற்றார்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )