BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

கோவில்பட்டி நகராட்சியை கடந்த 24 ஆண்டுகளுக்கு பின்னர் திமுக கைப்பற்றி நகர மன்ற தலைவராக கருணாநிதி போட்டியின்றி தேர்வு.


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சியை கடந்த 24 ஆண்டுகளுக்கு பின்னர் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நகர மன்ற தேர்தலில் 36 வார்டுகளில் 19 வார்டுகள் திமுக கைப்பற்றியது இந்நிலையில் இன்று நடைபெற்ற தலைவர் தேர்தலில் நகராட்சி 16வது வார்டு உறுப்பினர் கருணாநிதி நகர மன்ற தலைவருக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

இதனை தொடர்ந்து சமூக நலன் மற்றும் மகளிர் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கீதா ஜீவன் கோவில்பட்டி நகராட்சி வந்து நகரமன்ற தலைவர் கருணாநிதிக்கு சால்வை அணிவித்து வாழ்த்தினர். இதைப்போல் கயத்தார் பேரூராட்சி மன்ற தலைவருக்கு 6 வார்டு திமுக உறுப்பினர் சுப்புலட்சுமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.


புதூர் பேரூராட்சிக்கு 15-வது வார்டு திமுக உறுப்பினர் வனிதா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். விளாத்திகுளம் பேரூராட்சி 16வது வார்டு திமுக உறுப்பினர் அய்யன்ராஜ் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். எட்டயபுரம் பேரூராட்சிக்கு 5-ஆவது வார்டு
திமுக உறுப்பினர் ராமலட்சுமி போட்டியின்றி செய்யப்பட்டார் கழுகுமலை பேரூராட்சிக்கு 12வது வார்டு திமுக உறுப்பினர் அருணா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )